districts

img

திருநெல்வேலி - மதுரை இரட்டை ரயில் பாதையில் புதிய ரயில்களை இயக்கிடுக!

விருதுநகர், ஜூலை 11- நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த  திருநெல்வேலி-மதுரை இடையேயான  இரட்டை ரயில் பாதைப் பணிகள் நிறை வடைந்த போதும், பயணிகளுக்குப் போதுமான புதிய ரயில்களை இயக்கிட இரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்னக ரயில்வேயில் கடந்த 2018  முதல் நடைபெற்று வந்த மதுரை-திரு நெல்வேலி இரட்டை ரயில் பாதைப் பணி கள் நிறைவடைந்து 2023 மார்ச் 7 முதல் அனைத்து ரயில்களும் இரு வழித்தடங்  களில் இயக்கப்பட்டு வருகிறது. இத னால், ரயில் நிலையங்களுக்கு ஏற்க னவே வந்த ரயில்கள் எதிர் திசையில் வரும் ரயிலுக்காக காத்திருந்த நிலை மாறியுள்ளது. மேலும், பயண நேரமும் கணிசமாகவே குறைந்துள்ளது. தற் போது, ரயில் நிலையங்களுக்கு பல  ரயில்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு  முன்னதாகவே வந்து சேரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தென் மாவட்ட மக்  கள் மற்றும் ரயில் பயணிகள் நெல்லை,  தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங் கோட்டை ஆகிய பகுதிகளிலிருந்து சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய  நகரங்களுக்கு செல்லும் வகையில் கூடு தலான ரயில்களை இயக்கிட வேண்டு மென வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் தேதியில்  ரயில்வே கால அட்டவணை வெளியிடு வது வழக்கம். ஆனால், சமீபத்தில் சில ஆண்டுகளாக ரயில்வே நிர்வா கம் அக்டோபர் மாதம் கால அட்டவணை யை வெளியிட்டு வருகிறது.  அதேவேளை, ரயில்வே வாரியம்  மூலம் தமிழ்நாட்டிற்கு பரிந்துரைக்கப்  பட்ட பல புதிய ரயில்கள் இயக்கப்பட வில்லை எனவும் பொது மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, புதிய ரயில்  களை இயக்குவதோடு, ஏற்கனவே, ரயில்வே வாரியம் மூலம் பரிந்துரைக் கப்பட்ட வண்டிகளையும் இயக்கிட வேண்டுமென பொது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்பு

ஏற்கனவே, தெற்கு ரயில்வேயில் மதுரை கோட்டத்தின் மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு அதிக அளவிலான வரு வாய் கிடைத்து வருகிறது. தென் மாவட்  டங்களுக்கு நீட்டிப்பு ரயில்களை இயக்கிடும் பட்சத்தில் மேலும் கூடுத லான வருவாய் கிடைக்க வாய்ப்புள் ளது. குறிப்பாக, வடமாநிலங்களில் இருந்து மதுரை வரை வரும் ரயில் களை நெல்லை வரை நீட்டிப்பு செய்ய  வேண்டும். மேலும், வடமாநிலங்களில் இருந்து கேரளா வழியாக நெல்லை வரை வந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்  கள் அனைத்தையும் மதுரை சந்திப்பு  ரயில் நிலையம் வரை நீட்டிப்பு செய்திட வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல், சேலம் மற்றும் திருச்சி  கோட்டங்களிலிருந்து தென் மாவட்டங்  களான நெல்லை, தூத்துக்குடி, கன்னி யாகுமரி மற்றும் செங்கோட்டை வரை கூடுதலான ரயில்களை இயக்கிட வேண்டும். நீண்ட நாட்களாக சிறப்பு ரயில்களாக இயங்கும் ரயில்களை நிரந்தரமாக இயக்க வேண்டும் என தென் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சிறப்பு ரயிலை 
தினசரி ரயிலாக இயக்கிடுக!

சிறப்பு ரயிலாக வாரத்தில் ஒரு நாள்  மட்டும் இயக்கப்பட்டு வரும் நெல்லை- தாம்பரம் (அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி, இராஜபாளையம், விருது நகர் வழியாக இயக்கப்படுகிறது) சிறப்பு ரயிலை தினசரி ரயிலாக இயக்கிட வேண்டும். வாரத்தில் ஒரு நாள் மட்டும் வரும்  மேட்டுப்பாளையம் -நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக இயக்கிட வேண்டும். கொல்லம்-விருதுநகர்-மானா மதுரை-இராமேஸ்வரம் இடையே புதிய ரயில்களை இயக்க வேண்டும். புதிய வந்தே பாரத் ரயில்கள்  சென்னை-கன்னியாகுமரி வரை யும் திருநெல்வேலியிலிருந்து -பெங்க ளூரு வரையும் செல்லும் வகையில் வந்தே பாரத் ரயில்களை இயக்கிட வேண்டும். 

 நீட்டிப்பு ரயில்கள்

 திண்டுக்கல் -மதுரை வரை இயங்கும் பயணிகள் ரயிலை நெல்லை  வரையும், மதுரை-ஜெய்ப்பூர் வரை இயங்கும் பிகானியர் எக்ஸ்பிரஸ் ரயிலை நெல்லை வரையும், சண்டிகர்-மதுரை வரை இயங்கும் சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரயிலை தூத்துக்குடி வரை யும், மதுரை-சென்னை செல்லும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை திரு நெல்வேலியிலிருந்து புறப்படும் வகை யிலும் நீட்டிப்பு செய்திட வேண்டும். விழுப்புரம்-மதுரை பயணிகள் ரயிலை  செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்ய  வேண்டும். சேலம்-கரூர்-திருச்சி வரை  இயங்கும் பயணிகள் ரயிலை திருச்செந்  தூர் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.  போடி-மதுரை வரை இயங்கும் பய ணிகள் ரயில் வண்டியை தூத்துக்குடி மற்றும் செங்கோட்டை வரை நீட்டிப்பு  செய்ய வேண்டும். கோவை-மதுரை வரை இயங்கும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரசை தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்திட வேண்டும். டெமு ரயில்கள்  மானாமதுரை-மன்னார்குடி வரை செல்லும் டெமு ரயிலை விருதுநகர் சந்திப்பு வரை நீட்டிப்பு செய்திட வேண்டும். புதிய இணைப்பு ரயில்  செங்கோட்டை-மதுரை வரை அதி காலை நேரத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இணையாக புதிய ரயில் விட வேண்டும். தினசரி ரயில்கள்  கேரள மாநிலம் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வரை இயங்கும் சிறப்பு ரயிலை தினசரி ரயிலாக மாற்றி  இயக்க வேண்டும். குருவாயூர்-புன லூர் வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்  பிரஸ் ரயிலை மதுரை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. அறிவிக்கப்பட்ட ரயில்கள்  அறிவிக்கப்பட்ட திருப்பதி-கொல்லம் விரைவு ரயிலை உடனே  இயக்கிட வேண்டும். 2018இல் அறி விக்கப்பட்ட தாம்பரம்-செங்கோட்டை அந்தியோதயா ரயிலையும் காலதாம தமின்றி இயக்கிட வேண்டும் எனவும்  பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.