தேனி, டிச.17- ஓய்வூதியர் தினத்தை முன்னிட்டு தேனியில் அனைத்து ஓய்வூதியர் கூட்ட மைப்பு சார்பில் கருத்தரங்கம் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பு தலைவர் சி.பா.ஆண்டவர் தலைமை வகித்தார். ஏபி.முருகேசன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் பா.ராம மூர்த்தி தொடக்க உரையாற்றினார். தமுஎகச மாநிலதுணைப் பொதுச் செயலாளர் கே.வேலாயுதம் சிறப்புரை யாற்றினார். பெ.ராமசாமி நன்றி கூறினார். இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் சி.முருகன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பி.பேயத்தேவன், கா,துரைராஜ், பேரா.சவுக்கத் அலி, கே.சந்திரசேகர், எம்.பாலையா, சி.மு.இப்ராஹிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.