districts

img

ஓய்வூதியர் தின கருத்தரங்கம்

மதுரை, டிச. 18-  ஓய்வூதியர் தினத்தை முன்னிட்டு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் ஓய்வூ தியர் தின விழா மதுரை மூட்டா அரங்கத் தில் நடைபெற்றது.  முன்னாள் மாநில பொருளாளர் அழ கர்சாமி துவக்கவுரையாற்றினார்.மாவட்ட செயலாளர் ராமசாமி விளக்கிப் பேசினார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்ட செயலாளர் சீனி வாசன் சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி நன்றி கூறினார். விழாவில் 80 வயது நிறைந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடை பெற்றது. மேலும் விழாவில் தில்லியில் நடை பெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது போராட்டக் களத்தில் உயிர் நீத்த விவ சாயிகளுக்கும், ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் நீத்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

;