பழனி, ஜன.30- பழனி நகர்,சிவகிரிப்பட்டி ஊராட்சி, தட்டான்குளம் பகுதியில் உள்ள பாலர் சங் கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடியரசு தின விழா நடைபெற்றது. கோலப் போட்டி, ஓவியப் போட்டியில் வென் றவர்களுக்கும் கலந்துகொண்ட பெண்கள், குழந்தைகள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் மூன்று பரிசுகளை அன்னலட்சுமி, காவியா, மணிமேகலை ஆகி யோர் பெற்றனர். பரிசளிக்கும் நிகழ்வு நகர் குழு உறுப்பினர் அன்னலட்சுமி தலைமை யில் நடைபெற்றது. பரிசுகளை, அறிவியல் இயக்கத்தின் திண்டுக்கல் மாவட்ட துணை தலைவர் சிராஜ் நிஷா, அறிவியல் இயக்க முன்னாள் மாநிலத் தலைவர் பேராசிரியர் சோ.மோகனா மற்றும் ராஜேந்திரன், வாலி பர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் பானுப் பிரியா, கட்சிக் கிளைச் செயலாளர் பாண்டி யம்மாள், பாலர் சங்க நிர்வாகிகள் காவியா, காயத்திரி ஆகியோர் கலந்துகொண்டு பரி சளித்தனர். குருசாமி நன்றி கூறினார். இதில் அப்பகுதியில் உள்ள பெண்களும் குழந்தை களும் பங்கேற்றனர்.