districts

img

பாளை. சிறையில் விசாரணை கைதி மரணம் 9ஆவது நாளாக உடலை வாங்க மறுப்பு

திருநெல்வேலி, ஜூன் 22- பாளையங் கோட்டை மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்த விசாரணை கைதி தங்கசாமி மரண மடைந்ததையடுத்து அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 9 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் அவர்கள், நீதி விசாரணை கோரி நெல்லை சரக காவல் துணைத் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த வர் தங்கசாமி (26). சட்ட விரோத மது விற்பனை செய்த வழக்கில் கைது செய்த போலீசார், விசா ரணை கைதியாக பாளை யங்கோட்டை மத்திய சிறையில் அடைத்திருந்த னர்.  இந்நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு திடீரென தங்கசாமி உயிரி ழந்தார். அவரது இறப்பில் மர்மம் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட காவல்துறை யினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உற வினர்கள் போராட்டத்தில் ஈடு பட்டு வருகிறார்கள். 9 ஆவது நாளாக வியாழக்கிழமையும் உடலை வாங்கவில்லை.  இந்நிலையில், தங்க சாமியின் உறவினர்களும், அனைத்துக் கட்சி நிர்வாகி களும் நெல்லை  சரக காவல் துணைத் தலைவர்அலு வலகத்தில் புதன்கிழமை மாலை 6.45 மணிக்கு அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது-

தங்கசாமியின் மர ணத்திற்கு காரணமான புளி யங்குடி காவல் நிலைய அதிகாரிகள், பாளை யங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகள் மீது கொலை  வழக்கும், பட்டியல் - பழங் குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்  வழக்கும் பதிவு செய்திட  வேண்டும். தங்கசாமி மர ணம் தொடர்பாக உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் பணியில் இருக்கும் நீதி பதியின் மூலம் முறை யாக விசாரணை மேற் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர் குடும் பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும். குடும் பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவேண்டும் என மனுவில் வலியுறுத்தப் பட்டிருந்தது. மனுவை சிபிஎம் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் எம். சுடலைராஜ்,  சி.பி.ஐ.எம்.எல் மாநில குழு உறுப்பி னர் ரமேஷ், மாவட்டச் செய லாளர் சுந்தர்ராஜ், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட நிர்வாகி முத்துவளவன், மக்கள் கண்காணிப்பக வழக்கறிஞர் மாடசாமி, மற்றும் கலைக்கண்ணன் திருக்குமரன், தங்கசாமியின்  உறவினர்கள்,வாலிபர் சங்க முன்னாள் மாவட்டத் தலை வர் ராஜேஷ்  ஆகியோர்  கொடுத்தனர்.