இராமநாதபுரம்,அக்.20- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக மாவட்ட அளவிலான துளிர் வினாடி- வினா போட்டி சிஎஸ்ஐ கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அய்யாசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கு.காந்தி முன்னிலை வகித்தார். கல்லுாரி பேராசிரியர் கோபாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.பாலமுருகன் வரவேற்றார். இராமநாதபுரம் மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஏ.எஸ்.கர்ணன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டிப் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பி.பாலகிருஷ்ணன் நிறைவுரையாற்றினார் .ஜந்தர் மந்தர் போட்டியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெரோம் நன்றி கூறினார். ஜூனியர் பிரிவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி காடங்குடி முதலிடமும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கோவிந்தமங்கலம் இரண்டாம் இடத்தையும் பெற்றன. சீனியர் பிரிவில் திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும் அரசு உயர்நிலைப்பள்ளி விலங்கலத்தூர் இரண்டாம் இடமும் பெற்றன. சூப்பர் சீனியர் பிரிவில் முதுகுளத்தூர் பள்ளி வாசல் மேல்நிலைப்பள்ளி முதலிடமும் சாயல்குடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்றன. ராமநாதபுரம் வேலுமாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடமும் நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடமும் சீனியர் பிரிவில் செய்தம்மாள் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடமும் பார்த்திபனூர் சென்மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடமும் சூப்பர் சீனியர் பிரிவில் ராமநாதபுரம் நேஷனல் அகாடமி வெற்றி மேல்நிலைப்பள்ளி முதலிடமும் ராமநாத புரம் சேதம்மாள் ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இரண்டாம் இடமும் பெற்றன. இவர்கள் திண்டுக் கல்லில் நடைபெறவுள்ள மண்டல அளவிலான போட்டி யில் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறி வியல் இயக்க மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.