விருதுநகர், அக்.12- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்துர் அருகே உள்ள படிக்காசுவைத்தான்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 134 பயனாளிகளுக்கு ரூ.24லட் சத்து 17ஆயிரத்து 720மதிப்பிலான நலத்திட்ட உதவி களை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.ரவிகுமார் வழங்கி னார். அதில், வருவாய்த்துறை மூலம், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 25 பயனாளிக்கு தலா ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உதவித்தொகையும், 5 பயனாளிகளுக்கு ரூ.81 ஆயிரத்து 100 மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாவும், 38 பேருக்கு நத்தம், புஞ்சை பட்டாக்களும், 15 நபர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளும், வேளாண் மைத்துறையின் மூலம் 5 பேருக்கு ரூ.21ஆயிரத்து 41 மதிப்பில் இடுபொருட்களும், ஆவாஸ் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.7லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணைகளும், மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 4 நபர்களுக்கு ரூ.6 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் ஆட்டுக் கொட்டகை அமைக்கவும், 3 பேருக்கு ரூ.4 லட்சத்து 17ஆயிரம் மதிப்பில் மாட்டு கொட் டகை அமைக்கவும் ஒருவருக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் பண்ணை குட்டை அமைக்கவும் உத்தரவு வழங்கப் பட்டது. மேலும் 5 பேருக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பில் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டவும், 8 நபர்களுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பில் மருந்து பெட்டகங்களும், 5 பயனாளிகளுக்கு ரூ. 27,390 மதிப்பிலா தையல் இயந்திரங்களையும், 4 பயனாளி களுக்கு ரூ.19,480 மதிப்பில் தேய்ப்பு பெட்டிகளும் வழங்கப்பட்டன. மேலும் இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திலகவதி, சிவகாசி, சார் ஆட்சியர் பிருதிவிராஜ், தனித்துணை ஆட்சியர் (சமூகப்பாது காப்பு திட்டம்) ஜெயராணி, இணை இயக்குநர் (வேளாண் மைத்துறை) உத்தண்டராமன், துணை இயக்குநர்(கால் நடைத்துறை) கோவில்ராஜா, வட்டாட்சியர் ராமசுப்பிர மணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.