districts

img

பேரா.அருணனின் நூல்கள் வெளியீட்டு விழா

மதுரை, ஜூலை 10- பேரா.அருணன் எழுதிய “இந்தியா வின் தேசிய இனப் பிரச்சனைகள்-அரசி யல் கட்டுரைகள்”, “தமிழ் சினிமாவின் வர லாற்று நாயகர்கள்-கலை இலக்கியக் கட்டு ரைகள்” ஆகிய இரண்டு நூல்கள் மது ரையில் ஞாயிறன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் நிகழ்விற்கான ஏற்பாடு களைச் செய்திருந்தது.  “தமிழ் சினிமாவின் வரலாற்று நாய கர்கள்-கலை இலக்கியக் கட்டுரைகள்” நூலை அமைப்பின் மாநிலத் துணைச் செய லாளர் ஓவியக் கவிஞர் ஸ்ரீரசா வெளியிட,  பேரா.ஆர்.சீனிவாசராகவன் பெற்றுக் கொண்டார்.  “இந்தியாவின் தேசிய இனப் பிரச்சனை கள்-அரசியல் கட்டுரைகள்” நூலை மாநி லத் துணைத் தலைவர் கவிஞர் நந்த லாலா வெளியிட, பேரா.பெரியசாமிராஜா பெற்றுக் கொண்டார்.  பேரா.ஆர்.சீனிவாசராகவன், “தமிழ் சினிமாவின் வரலாற்று நாயகர்கள் நூலின்  நுணுக்கமான விவரங்களை எடுத்துரைத் தார்”. அதைத் தொடர்ந்து பேசிய, ஸ்ரீரசா, தமிழ் சினிமாவின் வரலாற்று நாயகர்கள் நூலில் அருணனின் விமர்சனப் பார்வை கள் வெளியிடப்பட்டுள்ள விதத்தையும், நூலில் விவாதிக்க வேண்டிய கட்டுரை யான, “பிராமணியம் இல்லாத இந்து மதம்”  பற்றிய கட்டுரையின் முக்கியத்துவத்தை யும் எடுத்துரைத்தார். பேரா.பெரியசாமிராஜா பேசுகையில், “இந்தியாவின் தேசிய இனப் பிரச்சனை கள் சரியான கோணத்தில் அணுகப்பட் டுள்ளது” என்றார்.  கவிஞர் நந்தலாலா பேசுகையில், “இந்தியாவின் தேசிய இனப் பிரச்சனை கள் குறித்து அறிந்து கொள்வதற்கு இந்த  நூலை அனைவரும் வாசிக்க வேண்டும். மற்றவர்களையும் வாசிக்கத் தூண்ட வேண்டும் என்றார். அருணனின் இந்த  நூல் இன்றைய காலத்திற்கு அவசியமான ஒன்று என்றார்”. தொடர்ந்து பேரா.அரு ணன் ஏற்புரை வழங்கினார்.  முன்னதாக மதுரை மாநகர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர், பூ.பாண்டிய முத்துக்குமார் வரவேற்புரையாற்றினார். மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் வாழ்த்திப் பேசினார். மதுரை மாநகர் மாவட்டப் பொருளாளர் மானிடன் நன்றி கூறினார்.முன்னதாக, நன்மாறன் கிளைச் செயலாளர் பழனிவேலு பாடல்கள் பாடி னார்.