districts

img

பள்ளியை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்

கடமலைக்குண்டு, டிச.22- தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி தலைமையாசி ரியரை கண்டித்து பொதுமக்கள் பள்ளி யை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர்.  கரட்டுப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி யில் 84 மாணவ-மாணவிகள் படித்து வரு கின்றனர். இப்பள்ளியின் தலைமையாசி ரியர் தனலட்சுமி வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே பள்ளிக்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது.  இதனால், புதனன்று காலை கரட்டுப் பட்டி பகுதியை சேர்ந்த 30க்கும் மேற் பட்டோர் தலைமையாசிரியரை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். அப்போது தலைமை யாசிரியர் விடுமுறையில் இருந்ததால் பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  தலைமையாசிரியர் அடிக்கடி விடுமுறை எடுப்பதால் பள்ளி மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுக்காக கை யொப்பம் பெற பள்ளிக்கு நாள் கணக்கில் அலைய வேண்டிய நிலை உள்ளது.  இதுதொடர்பாக மாவட்ட கல்வி அதி காரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த கடமலைக்குண்டு காவல் துறையினர் பொதுமக்களை சமரசம் செய்தனர்.

;