அருமனை, செப்.18- நாடு தழுவிய மக்கள் சந்திப்புஇயக்கத்தின் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பேரூ ராட்சி பகுதிகளில் அருமனை பேரூராட்சி தலைவர் லெதி காமேரி தலைமையில் நடை பயணம் மேற்கொள்ளப்பட் டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினரு மான ஆர். லீமாறோஸ் நடை பயணத்தை துவக்கி வைத் தார். இதில் வட்டாரச் செயலா ளர் சசிகுமார், அருமனை பேரூராட்சி கவுன்சிலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .மாலையில் நிறைவு நிகழ்ச்சி அருமனை யில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆத வன் தீட்சண்யா உரையாற்றி னார்.
நாகர்கோவில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தோர் கிளை சார்பில் சனிக்கிழமையன்று பார்வதிபுரம் குடியிருப்பு பகு தியில் பிரசுரங்களை விநியோ கம் செய்து கே. மாதவன் தலைமையில் மக்கள் சந் திப்பு இயக்கம் நடைபெற் றது. அதையொட்டி நடந்த தெருமுனைக் கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செய லாளர் ஆர். செல்லசுவாமி, மூத்த தோழர்கள் என். முரு கேசன், எஸ். மணி, இந்திரா, எஸ்.எஸ். சந்திரன், மகராஜா பிள்ளை, நாகர்கோவில் மாநகர செயலாளர் கே. மோகன், குமரேசன், முபீஸ், அஸ்வின், ஜெசிந்த் உள ளிட்டோர் பங்கேற்றனர்.