சிவகங்கை, டிச.13- தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் சிவ கங்கை மாவட்ட 6 ஆவது பேரவை மாவட்ட தலைவர் வடிவேலு தலை மையில் நடைபெற்றது. மாவட்ட முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி சங்க கொடியை ஏற்றினார். மாநில செயற்குழு உறுப் பினர் மெய்யப்பன் அஞ்சலி தீர்மா னம் வாசித்தார். ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் தொடங்கி வைத்து பேசினார். மாநில துணைத் தலைவர் குப்பன் நிறைவுரையாற்றினார். அரசு ஆசிரியர்கள் ஓய்வூதிய சங்க மாவட்ட தலைவர் முத்துசாமி வாழ்த்தி பேசினார். பேரவையில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும், காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.