திருவனந்தபுரம், செப்.29- முழுஅடைப்புப் போராட்டத் தின் போது பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியதற்காக பி.எப்.ஐ. அமைப்பினர் ரூ.5.20 கோடியை வைப்புத்தொகையாக செலுத்த கேர உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பி னரின் இடங்களில் தேசிய புல னாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதைக் கண்டித்து கடந்த 23-ஆம் தேதி கேரளாவில் அந்த அமைப்பினர் முழு அடை ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. மேலும், போராட்டத்தின் போது பொது சொத்துக்களை சேதப்படுத்தப் பட்டன. கேரள மாநிலத்தில் முழு அடைப்பு தடை விதிக்கப்பட்டது. தண்டனை மீறி நடந்த முழு அடைப்பு போராட்டத்தை, தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்து கேரள உயர்நீதிமன்றம் விசாரித்தது. நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்க ரன் நம்பியார் மற்றும் முகமது நியாஸ் சிபி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள் கடு மையான விளைவுகளை சந்திக்க நேரிடும் ஏற்கனவே கூறியிருந்தது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு வைப்புத் தொகை யை செலுத்தத் தவறினால் அரசு அந்தப் பணத்தை வசூலிப்பதற் கான நடவடிக்கையை உள்துறை செயலர் மேற்கொள்ளலாம் எனக் கூறியுள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநிலத்தில் நடத்திய பல்வேறு போராட்டங்கள் தொடர்பாக வழக்குகள் மாஜிஸ்திரேட்டு, செஷன்ஸ் நீதிமன்றங்களில் உள்ளன. இந்த அனைத்து வழக்கு களிலும் பிஎஃப்ஐ கேரள மாநிலப் பொதுச் செயலாளர் அப்துல் சத்தாரை கூடுதல் எதிர்மனுதார ராக ஆக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கேரள மாநில அரசுப் போக்குவரக்கழகம் தங்களது சொத்துக்கள் சூறையாடப்பட்ட தற்காக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ரூ.5.06 கோடி இழப்பீடு வழங்கவேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் மாநில அரசுப் பேருந்துகளை சேதப்படுத்திய தற்காக ரூ. 5.20 கோடியை பாப்பு லர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு முன்வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். இந்தப் பணத்தை அமைப்பின் மாநி லப்பொதுச் செயலாளர் இரண்டு வாரங்களில் செலுத்த வேண்டு மெனவும் நீதிபதிகள் உத்தர விட்டனர்.