districts

மதுரை முக்கிய செய்திகள்

திண்டுக்கல் மாநகராட்சி உடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு  

திண்டுக்கல், ஜன.27- திண்டுக்கல் மாநகராட்சியுடன் திண்டுக்கல் ஊராட்சி  ஒன்றியத்தில் உள்ள எட்டு ஊராட்சிகளை இணைப்ப தற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்து திண்டுக்  கல் ஆட்சியர் அலுவலகம் முன்பாக பெருந்திரள் ஆர்ப்  பாட்டம் நடத்தினர். நான்காயிரம் மனுக்கள் திண்டுக்கல் ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சியில் தற்போது 48 வார்டுகள்  உள்ளன. மிகச் சிறிய மாநகராட்சியாக உள்ளது. இதனை  விரிவாக்கம் செய்ய மாநகராட்சி எல்லையை ஒட்டி  அமைந்துள்ள ஊராட்சிகளான அடியனூத்து, தோட்ட னூத்து  பாலகிருஷ்ணாபுரம், பள்ளபட்டி, குரும்பபட்டி, முள்ளிப்பாடி, செட்டி நாயக்கன்பட்டி, சீலப்பாடி ஆகிய எட்டு ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க தமிழக  அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியானது. இந்த ஊராட்சி பகுதி கிராமங்கள் பெரும்பாலா னவை விவசாய நிலங்களாக உள்ளன. இதனால் விவசாயி களுக்கு கிடைக்கக்கூடிய சலுகைகள் கிடைக்காமல் போகும் நிலை உள்ளது. மேலும் மாநகராட்சியில் இணைக்  கும் பட்சத்தில் விவசாய நிலங்கள் வைத்துள்ள விவ சாயிகளுக்கு பெரும் வரிச்சுமை ஏற்பட வாய்ப்புள்  ளது. 100 நாள் வேலை திட்டம் மூலம் ஆயிரக்கணக்கா னோரின் வேலை வாய்ப்புகள் பறிக்கப்படும் அவல நிலை  உள்ளது. மேலும் கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட மத்திய - மாநில அரசுகளின் வீடு கட்டும் திட்டங்களும் சலுகைகளும் பறிபோகும் நிலை உள்ளது. எனவே திண்டுக்கல் மாநகராட்சியுடன் எட்டு ஊராட்சி களை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று  வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் ஒன்றிய குழு சார்பாக இந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் ஒன்றியச் செயலாளர் ஆர்.சரத்குமார் தலைமை வகித்தார். மாவட்டச்  செயலாளர் கே.பிரபாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் அஜாய்கோஷ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் தி. பாக்கியம், ஜெயந்தி, சிபிஎம் முன்னாள் ஒன்றிய கவுன்  சிலர்கள் செல்வநாயகம், ஜீவநந்தினி, முன்னாள் செட்டி நாயக்கன்பட்டி  ஊராட்சி தலைவர் செல்வகணேசன், தோட்டனூத்து முன்னாள் வார்டு உறுப்பினர் கஸ்பர் ராஜ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் அம்மையப்பன், ஒன்றிய தலைவர் பழனிச்சாமி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றியச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு திண்டுக்கல் ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

ஐ.வி.முன்னணி சார்பில் தேனியில் டிராக்டர் பேரணி

தேனி, ஜன.27- தேனியில் ஞாயிற்றுக்கிழமை விவசாய கடன்களை  தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் டிராக்டர் பேரணி நடைபெற்றது. விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வலியுறுத்தியும், மின்சார உற்  பத்தியை தனியார் மயமாக்குவதை கைவிட வலியுறுத்தி யும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும்  ஐக்கிய விவசாயிகள் முன்னணி தேனி மாவட்ட ஒருங்கி ணைப்பு குழு சார்பில் டிராக்டர், வாகன பேரணி நடை பெற்றது. தேனி வாரச்சந்தையிலிருந்து தொடங்கிய பேரணி ஐக்கிய விவசாயிகள் முன்னணி தேனி மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் த.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. பேரணியில் டிராக்டர், வாகனங்களில் விவசாயிகள் திர ளாக பங்கேற்றனர். தேனி பி.சி. பெண்கள் மேல்நிலைப்  பள்ளி வரை பேரணி நடைபெற்றது. பேரணியில் தமிழ்நாடு  விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கே.ராஜப்பன், எஸ்.கே. பாண்டியன், பி.சந்திரன், விவசாயிகள் சங்க நிர்வாகி கள் காசிவிஸ்வநாதன், திருமலைக்கொழுந்து, விவிமு விவசாயிகள் முன்னணி மாவட்டச் செயலாளர்  செல்வ ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆக்கிரமிப்பு அகற்றம்

கடமலைக்குண்டு, ஜன.27- தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே வனத்தாய்ப்புரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிரா மத்தில் அமைந்துள்ள ஊர் பொது கிணறு மற்றும் ஓடைக்கு  செல்லும் பாதையை அதே கிராமத்தை சேர்ந்த தனிநபர் ஆக்கிரமித்துள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார்  அளித்தனர்.  இதையடுத்து வருவாய்த்துறையினர் அளவீடு செய்ததில் கிராம பொது பாதை உட்பட சுமார் 2 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது தெரியவந்தது. அதனைத்  தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் ஒன்றிய அதிகாரி கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆக்கிர மிப்புகளை அகற்றி முள்வேலி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது தனி நபர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து தற்காலிகமாக பணி நிறுத்தி வைக்கப்பட்டது.  பொதுமக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து திங்களன்று மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடு பட்டனர். ஜே.சி.பி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்  பட்டு அரசு நிலத்தை சுற்றிலும் முள்வேலி அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சாத்தூரில்  உடல் தானம்

சாத்தூர், ஜன.27- சாத்தூர் அருகே உள் ளது அயன் சத்திரப்பட்டி. இப்பகுதியைச் சேர்ந்தவர் ஆர்.கண்ணன் (58). இவர் உடல் நலக் குறைவு காரண மாக உயிரிழந்தார். இந்நிலையில், அவரது  உடலை மனைவி வேலம்  மாள், மகன்கள் பாண்டிய ராஜன், சுரேஷ், பாரதிராஜா, மகள் சீதாபாரதி ஆகியோர் தானமாக வழங்க முடிவு செய்தனர். அதன்படி, அவரது உடலை மதுரையில் உள்ள  தனியார் மருத்துவக் கல்லூ ரிக்கு வழங்கினர். முன்ன தாக அவரது கண்களையும் தானமாக வழங்கியது குறிப்  பிடத்தக்கது.

வரத்து அதிகரிப்பு காரணமாக சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி

திண்டுக்கல், ஜன.27- வரத்து அதிகரிப்பின் காரணமாக சின்ன  வெங்காயத்தின் விலை கடுமையாக வீழ்ச்சி  அடைந்துள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:  திண்டுக்கல்லில் வெங்காயத்திற்கென தனி சந்தை உள்ளது. இங்கு திண்டுக் கல், தேனி, கம்பம், வேடசந்தூர், ஒட்டன் சத்திரம், தாராபுரம் பகுதிகளிலிருந்தும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலிருந்தும் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விற்பனைக்கு வருவதுண்டு. இந்த சந்தையிலிருந்து தான் தமிழ் நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் மட்டு மின்றி மலேசியா, சிங்கப்பூர், இலங்கை  போன்ற வெளிநாடுகளுக்கும் சின்ன வெங்காயம் ஏற்றுமதியாகிறது.  கடந்த வாரம் வரை தொடர் மழை யின் காரணமாக வெங்காய வரத்து குறைந்  தது. ராசிபுரம், விளாத்திகுளம் பகுதிகளி லிருந்து 10 டன் வரை வெங்காயம் வரத்து  இருந்தது. இதனால் விலை கிலோ ரூ.60 லிருந்து ரூ.100 வரை உயர்த்தி விற்கப்  பட்டது. தற்போது தமிழகம் மட்டுமின்றி  கர்நாடக மாநிலம் மற்றும் ராசிபுரம்,  விளாத்திகுளம், அந்தியூர் ஊர்களிலி ருந்து சின்ன வெங்காயம் 60 டன்  வரை  திண்டுக்கல் சந்தைக்கு வரத்து இருந்தது. இதனால் ரூ.100 வரை விற்ற சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சியடைந்தது. கிலோ ரூ.60 முதல் ரூ.30 வரை வீழ்ச்சிய டைந்துள்ளது. வரத்து அதிகரிப்பு காரண மாக விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயி கள் வேதனையடைந்துள்ளனர். ஆனால்  வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்  ளனர்.

கடந்த 4 ஆண்டுகளில் மதுரை மாநகரில்  67 ஆயிரம் மீட்டர் பெட்டிகள் பழுது

மதுரை, ஜன.27-  மதுரை மாநகர் மின் பகிர்மான அலுவல கங்களுக்கு உட்பட்ட இணைப்புகளில் கடந்த 4  ஆண்டுகளில் 66 ஆயிரத்து 933 மின் அள வீட்டுப் பெட்டிகள் (மீட்டர் பெட்டிகள்) பழுத டைந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக வெளி யானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சத்திய சாய்நகரைச் சேர்ந்த இந்தி யன் குரல் உதவி மையம் என்ற அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் ஆர்டிஐ ஆர்வ லருமான என்.ஜி.மோகன் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி மின்வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகத்தின் பொது தகவல் அலுவலருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அக்கடிதத்தில், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள மின் பகிர்மான அலுவலகங்களில் கடந்த  2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை ஒரு முனை (சிங்கிள் பேஸ்) மற்றும் மும்முனை (திரி பேஸ்) மின் அளவீட்டுப் பெட்டிகள் (மீட்டர் பாக்ஸ்) பழுதடைந்த விபரம் தருமாறு கோரியிருந்தார். இதன் அடிப்படையில் மதுரை பெருநக ருக்கு உட்பட்ட மின் பகிர்மான அலுவலகங்க ளின் கீழ், மதுரையின் வட பகுதியில் ஒரு முனை  மீட்டர் பெட்டிகள் 18,033, மும்முனை மீட்டர் பெட்டி கள் 7,826, வணிக நோக்கு மும்முனைப் பெட்டி கள் 154; தென் பகுதியில் ஒரு முனை மீட்டர் பெட்டி கள் 10,452, மும்முனைப் பெட்டிகள் 3,126, வணிக  நோக்கு மும்முனைப் பெட்டிகள் 229; மேற்குப் பகுதியில் ஒரு முனை மீட்டர் பெட்டிகள் 21,088,  மும்முனைப் பெட்டிகள் 5,923, வணிக நோக்கு  பெட்டிகள் 102 என 49 ஆயிரத்து 573 ஒரு முனைப் பெட்டிகளும், 16 ஆயிரத்து 875 மும்முனைப் பெட்டிகளும், 485 வணிக நோக்குப்  பெட்டிகளும் என மொத்தம் 66 ஆயிரத்து 933  மீட்டர் பெட்டிகள் பழுதடைந்து மாற்றம் செய்யப்  பட்டுள்ளதாக ஆர்டிஐ பதிலில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து ஆர்டிஐ ஆர்வலர் என்.ஜி. மோகன் கூறுகையில், ‘பொதுவாக மின்வாரிய அலுவலகத்தின் மூலமாக வழங்கப்படும் மின் அளவீட்டுப் பெட்டிகள் தரம் குறைந்தவையாக உள்ளன. அதுமட்டுமன்றி, மின் அழுத்தத்தில் ஏற்படுகின்ற ஏற்ற இறக்கம் காரணமாக இந்தப்  பெட்டிகள் பழுதடைய காரணமாக அமை கின்றன.  இதனால், பொதுமக்களுக்கு அதிக பாதிப்பு  ஏற்படுகிறது. உதாரணமாக எனது தோட்டத்தில் மும்முனை இணைப்பு உள்ளது. அங்கிருந்த மின் அளவீட்டுப் பெட்டி பழுதடைந்தது. கடந்த 3 மாதங்களாக மழை பெய்தது. இதனால் தோட்டத்தில் உள்ள மின்சார மோட்டாரை பயன்படுத்தவேயில்லை.  உடனடியாக  சோழவந்தான் புறநகர் மின்வாரிய உதவி பொறியாளருக்கு கடிதம் எழுதி  தகவல் அளித்தும், குறைந்தபட்ச கட்டணம் விதிக்காமல், பழுதான காலத்திற்கு முன்பாக 6 மாத மின் நுகர்வின் சராசரியை எனக்கு மின்  கட்டணமாக விதித்தார்கள். இதனை எவ்வாறு  ஏற்க இயலும்? மேலும் வயர் மேன் பற்றாக் குறையின் காரணமாக மின்வாரியத்திற்கு சம்பந்தமே இல்லாத ஆட்கள் மூலம் பணி  செய்வதால் மின் கம்பிகளை மாற்றி இணைத்து விடுகின்றனர். இதனால் மின் அள வீட்டு பெட்டிகள் பழுதாகின்றன. ஆகை யால், மின்வாரியம் தரமான மின் அளவீட்டுப்  பெட்டிகளை வாங்குவதுடன், மின் விநியோ கத்தில் ஏற்படுகின்ற மின் அழுத்தக் குறைபாடு களை உடனடியாக களைய வேண்டும். மின்வாரி யத்திற்கு சம்பந்தமில்லாத நபர்களை வைத்து வேலை வாங்கக் கூடாது என்றார்.