மதுரை, ஜூன் 27- தாம்பரத்தில் இருந்து மதுரை, இராஜபாளையம், புனலூர், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் கொச்சு வேலிக்கு ஜூன் மாதம் வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ஏற்கெனவே தென்னக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த சிறப்பு ரயில் சேவை, பயணி கள் வசதிக்காக ஜூலை மாதம் மூன்றாம் வாரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள் ளது. அதன்படி தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயில் (06035) ஜூலை 4 முதல் ஜூலை 20 வரை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 09.40 மணிக்கு புறப்பட்டு, மறு நாள் மதியம் 01.40 மணிக்கு கொச்சு வேலி சென்று சேரும். மறு மார்க்கத்தில் கொச்சுவேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06036) ஜூலை 5 முதல் ஜூலை 21 வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழ மைகளில் கொச்சுவேலியில் இருந்து மாலை 03.35 பணிக்கு புறப்பட்டு மறு நாள் காலை 07.35 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மரு வத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருது நகர், சிவகாசி, திருவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பகோயில் சந்தை, கடைய நல்லூர், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரா, குன்டரா, கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 14 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகளுடன் கூடிய மின் சார ஜெனரேட்டர் பெட்டிகள் ஆகி யவை இணைக்கப்படும். என்று மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.