ஆட்டோ தொழிலாளர்களைப் பாதிக்கும் ஆன்லைன் அபராதத்தைக் கைவிட வேண்டும். ஆட்டோ தொழிலைப் பாதுகாக்க செயலியை அரசு உருவாக்க வேண்டும். சட்டவிரோதமாக இயங்கும் பைக் டாக்சிகளை தடை செய்யவேண்டும். ஒன்றிய அரசின் மோட்டா வாகனச் சட்டத்தை தமிழகத்தில் அமல் படுத்தக் கூடாது என வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர்.தெய்வராஜ், மாவட்டச் செயலாளர் இரா.லெனின், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் என். கனகவேல், மாவட்டப் பொருளாளர் கே.அறிவழகன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.