districts

img

திண்டுக்கல் சந்தையில் கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம்

திண்டுக்கல், ஜுலை 5- தக்காளி விலை அதிகரித்த நிலையில்  சின்ன வெங்காயத்தின் விலையும் அதிக ரித்துள்ளது. திண்டுக்கல் சந்தையில் கிலோ  120 ரூபாய்க்கு சின்ன வெங்காயம் விற்ப னையானது.  திண்டுக்கல்லில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று தினங்கள் வெங் காய சந்தை நடைபெறும். இந்த வெங்காய சந்தைக்கு திண்டுக்கல்லை சுற்றி உள்ள  வேடசந்தூர், குஜிலியம்பாறை, ஒட்டன் சத்திரம், நிலக்கோட்டை, மற்றும் தேனி,  தாராபுரம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட  ஊர்களிலிருந்து உள்ளூர் வெங்காயங்க ளும் ஆந்திரா, கர்நாடகாவின் மைசூர் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் இந்த சந்தைக்கு 500 டன் சின்ன வெங்கா யம் வரத்து இருக்கும்.  இந்த சந்தைக்கு வரும் வெங்காயத்தை தமிழக மாவட்டங்களுக்கும் கேரளா போன்ற அண்டை மாநிலத்திற்கும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படு கிறது. தற்போது தமிழ்நாட்டில் சின்ன வெங்காயம் நடவு குறைந்ததன் காரண மாக திண்டுக்கல் சந்தைக்கு மைசூர் சின்ன  வெங்காயம் வரத்து உள்ளது. சந்தை நாட்க ளில் 500 டன் சின்ன வெங்காயம் வரத்துக்கு  பதிலாக தற்போது 50 டன் சின்ன வெங்கா யமே வந்துள்ளது. இதன் காரணமாக கடந்த  வாரம் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.50க்கு விற்ற நிலையில் தற்பொழுது வரத்து குறைவின் காரணமாக கிடுகிடு வென உயர்ந்து கிலோ ரூ.120க்கு விற்கப்படு கிறது.  கர்நாடகா மாநிலம் மைசூரில் கனமழை  காரணமாக ஒரு சில தினங்களில் அங்கி ருந்து வரும் வெங்காயமும் நின்றுவிடும். ஏற்கனவே தக்காளி விலை கடுமையாக உயர்ந்து கிலோ ரூ.100ஐ தாண்டி விற்ப னையாகி வருகிறது. இந்நிலையில் சின்ன  வெங்காயமும் கிலோ ரூ.120க்கு விற்பனை யாகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். ஏற்கனவே அரசு சென்னையில் உள்ள ரேசன் கடைகளில் தக்காளியை கொள்முதல் செய்து விநியோ கிக்கும் திட்டத்தை அமலாக்கி வருகிறது. அதே போல் தமிழ்நாடு முழுவதும் ரேசன்  கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி யை விற்க வேண்டும் என்ற கோரிக்கை  எழுந்துள்ளது. தற்போது சின்ன வெங்கா யம் கடுமையான விலை உயர்ந்துள்ளதால் ரேசன் கடைகளில் குறைவான விலைக்கு  சின்னவெங்காயத்தையும் விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள் ளது.