மதுரை, ஏப்.2- கொரோனா தொற்றுக்கு பிறகு அனைத்து விரைவு ரயில் களும் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களுக் கான முன்பதிவு பயணச் சீட்டு கள் முழுவதும் விரைவாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் இடைத்தரகர்கள் பய ணிகளுக்கு இயல்பாக கிடைக்க வேண்டிய முன்பதிவு பயணச் சீட்டுகளை அதிக அளவில் பதிவு செய்து முறைகேடு நடக்க வாய்ப் பிருக்கிறது. எனவே இதை தடுக்க மார்ச் மாதம் முழுவதும் மதுரை கோட்டத்தில் பல்வேறு தனியார் நடத்தும் பயணச் சீட்டு முன்பதிவு மையங்களில் ரயில்வே பாது காப்பு படை குற்றப்பிரிவு அலுவ லர்கள் அதிரடி சோதனை நடத்தி னர். மேலும் அங்கீகாரம் இல்லாத தனிநபர்கள் அதிக அளவில் பய ணச் சீட்டுகளை பதிவு செய்வதும் கண்காணிக்கப்பட்டது. இதில் 33 இடைத்தரகர்கள் 2 அங்கீகா ரம் பெற்ற முகவர்கள் முறைகேடு களில் ஈடுபடுவது கண்டுபிடிக் கப்பட்டது. அவர்களிடமிருந்து ரூ.4,41,686 மதிப்புள்ள 444 முன் பதிவு ரயில் பயணச் சீட்டுகள் பறி முதல் செய்யப்பட்டுள்ளன. இந்த 444 பயணச்சீட்டுகளின் ரயில்வே முன்பதிவு ரத்து செய் யப்பட்டு முறையாக பெற வேண்டிய பயணிகள் பயன்பாட் டுக்கு வழிவகை செய்யப்பட்டுள் ளது. இந்த அதிரடி சோதனைகள் மதுரை கோட்ட ரயில்வே மேலா ளர் பத்மநாபன் அனந்த் ஆலோ சனையின் பேரில் ரயில்வே பாது காப்பு படை ஆணையர் வி.ஜே.பி.அன்பரசு, துணை ஆணையர் ஆர்.சுபாஷ் ஆகியோர் தலை மையில் நடைபெற்றது.