திருநெல்வேலி, அக்.15- தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு சீட்டு நடத்து பவர்கள், தற்காலிகமாக திருமண மண்டபங்களில் பெரிய அளவில் இனிப்பு, கார வகைகளை தயாரிக் கும் நிறுவனங்கள் உள்பட அனைத்து இனிப்புகார வகைகள் தயாரிப்பாளர் கள் மற்றும் விற்பனையா ளர்களும் உணவு பாது காப்புதுறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொ துமக்களுக்கு விநியோகம் செய்வது உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் விதிகளில் கட்டாயம் ஆக்கப்பட்டுள் ளது. மேலும் இனிப்பு கார வகைகள் மற்றும் பேக்கரி உணவு பொருட்களை தயா ரிப்பவர்கள் தரமான மூலப் பொருட்களைக் கொண்டு தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களை செயற்கை நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது.
ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மறுபடியும் சூடுபடுத்தி உணவு தயாரிக்க பயன் படுத்தக் கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் தயாரிப்பா ளரின் முழு முகவரி, உண வுப் பொருளின் காலாவதி யாகும் காலம் ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும். உரிமம் உணவு பொருட்களை விற்பனை செய்த பின்னர் வழங்கும் ரசீது - பில்களில் உணவு அங்காடியின் உரிமம் எண் அல்லது பதிவு எண்ணை அச்சடித்து இருத்தல் வேண்டும். உணவு பொருட் களை பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகா தாரமான சூழலில் பொது மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயா ரிப்பவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர் கள் மற்றும் விற்பனையா ளர்களும் உடனடியாக http:/foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் 2006-ன் கீழ் தங்களது வணி கத்தினை பதிவு உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் உணவு (இனிப்பு மற்றும் கார வகைகள்) தயாரிப்பாளர்கள் அனை வரும் உணவு பாதுகாப்பு அடிப்படை பயிற்சி பெற்றி ருக்க வேண்டும். இது தொடர் பான உணவு புகார்கள் ஏதும் இருப்பின் 94440 42322 என்ற வாட்ஸ்-அப் புகார் எண்ணிற்கு பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.