புதுக்கோட்டை, டிச.6 - சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 65-வது நினைவு தினத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் ஒருபகுதியாக டெல்டா மாவட்டங்களிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கந்தர்வகோட்டையில் உள்ள அவரது சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத் துரை தலைமையில் சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஏ.ராமையன், ஒன்றியச் செயலா ளர்கள் வி.ரெத்தினவேல், ஜி.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். புதுக்கோட்டையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. நாகராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள், நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க பொதுச் செயலா ளர் ஆதவன் தீட்சண்யா மற்றும் நா.முத்துநில வன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஸ்ரீதர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் உறுதிமொழி ஏற்கப்பட் டது. மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சம்பத், ஜெயபால், ரேணுகா, மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி, டிஆர்இயு கோட்ட தலைவர் கரிகா லன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தஞ்சை கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் துணைத்தலைவர் ஜோன்ஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பிஎச்இஎல்லில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாநகர் மாவட்ட செயலா ளர் லெனின் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.
கும்பகோணம்
கும்பகோணம் சிஆர்சி அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு அனைத்து கட்சி இயக்கம் சார்பில் மாலை அணிவித்து ‘பாசி சத்தை வீழ்த்துவோம், மனுதர்மத்தை மாய்ப்போம், சமூகநீதியை காப்போம், சமத்துவம் படைப் போம்’ என உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற் றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் சின்னை.பாண்டியன், நகர செயலாளர் அன்புமணி, சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் ஜீவபாரதி, நகர செயலாளர் செந்தில் குமார், திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் டி.ஜி. ராஜேந்திரன், விசிக மண்டல செயலாளர் விவே கானந்தன், மாவட்ட செயலாளர் உறவழகன் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் கலந்து கொண்ட னர்.
மன்னார்குடி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட துணைத் தலைவரு மான பி.கந்தசாமி, கட்சியின் நகரச் செயலாளர் ஜி. தாயுமானவன், சிஐடியு மாவட்ட துணை தலைவர் ஜி.ரகுபதி, சிஐடியு இணைப்பு சங்க தலைவர் ஜி. முத்துகிருஷ்ணன் ஆகியோர் மன்னார்குடி அம்பேத்கர் சதுக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமுஎகச சார்பில் பொருளாளர் பாஸ்கர், செயலாளர் இயேசுதாஸ் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.
நீடாமங்கலம்
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் சார்பில் நீடாமங்கலம் கடைவீதி யில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் வி.எஸ்.கலியபெருமாள், மார்க்சிஸ்ட் கட்சி யின் ஒன்றிய செயலாளர் டி.ஜான் கென்னடி, தமுஎகச கிளை செயலாளர் வி.தமிழ்மணி, மாதர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.சுமதி, விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் டி. அண்ணாதுரை, சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பி னர் பி.காளியப்பன் உள்ளிட்ட பலர் வீரவணக்கம் செலுத்தினர்.
திருத்துறைப்பூண்டி
வேதை சாலையில் அமைந்துள்ள அம்பேத் கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் மாலை அணிவித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு, மாவட்ட குழு உறுப்பினர்கள் டி.சுப்ர மணியன், எஸ்.சாமிநாதன், ஒன்றிய செயலா ளர் காரல் மார்க்ஸ், ஒன்றிய கவுன்சிலர் வேதரத்தி னம், மூத்த தோழர் ஆர்.எம்.சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை
புரட்சியாளர் அம்பேத்கரின் 65வது நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் சிபிஎம் கட்சி அலுவலகத்தி லிருந்து பேரணியாக சென்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் முன்பு அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் மாலை அணி வித்து மரியாதை செய்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செய லாளர் ஸ்டாலின், மாவட்ட பொருளாளர் ஏ.ஆர். விஜய், சிபிஎம் ஒன்றிய செயலாளர் டி.ஜி.ரவி, நகர செயலாளர் துரைக்கண்ணு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கலந்து கொண்டனர். பூம்புகார் அருகேயுள்ள மேலப்பெரும் பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், ஏ. ரவிச்சந்திரன், ஏ.வி.சிங்காரவேலன், செம்ப னார்கோவில் ஒன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ், மாவட்டக்குழு உறுப்பினர் அம்மையப் பன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
சீர்காழி
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் எஸ்.இளங் கோவன் தலைமையில் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக சீர்காழி கச்சேரி சாலையில் உள்ள சிபிஎம் அலுவலகத்திலிருந்து, கட்சியின் ஒன்றிய செயலாளர் கே.அசோகன் தலைமை யில் பேரணி நடைபெற்றது. கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கே.கேசவன், மாவட்ட குழு உறுப்பினர் எல்.சுந்தரலிங்கம், வி.ச ஒன்றிய செயலாளர் எஸ்.ஞானபிரகாசம், வி.தொ.ச ஒன்றிய செயலா ளர் எம்.பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம் நாகப்பட்டினத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, நாகை மாவட்ட செயலாளர் வீ.மாரி முத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமுஎகச
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் நாகை மாவட்ட குழு சார்பில் குறிச்சியில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் தப்பட்டது. மாவட்டத் தலைவர் ஆவராணி, ஆனந் தன், மாவட்டச் செயலாளர் ஆதி.உதயகுமார், மாவட்டக் குழு உறுப்பினர் கே.டி.முருகையன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.வடிவேலு, கீழ் வேளூர் லெனின் ஆகியோர் கலந்து கொண்ட னர்.
வேதாரண்யம்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள அம்பேத்கரின் உருவச்சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளர் கோவை சுப்பிரமணியன், வேதாரண்யம் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.அம்பிகாபதி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஜெயங்கொண்டம் - ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் எதிரே உள்ள அம்பேத்கர் உருவச் சிலைக்கு மாவட்ட துணை செயலாளர் கதிர்வளவன் தலை மையில் மாலை அணிவித்து மரியாதை செலுத் தப்பட்டது.