districts

img

நத்தம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

நத்தம், செப்.7- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவி லாகும். கடந்த மாதம் 4-ம் தேதி முகூர்த்தக்கால் நடு தலுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.  பூஜைகளை தொடர்ந்து காசி, இராமேஸ்வரம், திருமலைக்கேணி, அழகர்கோவில் உள்ளிட்ட புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித  தீர்த்தக் குடங்கள் மேளதாளம் முழங்க கோபுர  உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டு கலசத்தில் புனித  நீர் ஊற்றப்பட்டது.  இதில் சுற்றுவட்டார பகுதிகளிலி ருந்தும், வெளி மாவட்ட பகுதிகளிலிருந்தும் பல்லாயி ரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரி சனம் செய்தனர். அவர்களுக்கு பூஜை மலர்களும், புனித தீர்த்தங்களும் வழங்கப்பட்டது. பின்னர் அனை வருக்கும் அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்  பட்டது. விழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கர பாணி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன், திண்டுக்கல் எம்.பி வேலுச்சாமி,அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், மாவட்ட  ஆட்சியர் விசாகன், முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டி அம்பலம்,நத்தம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன், சாணார்பட்டி தெற்கு மாவட்ட கவுன்சிலர் விஜயன், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, பேரூராட்சி துணைத் தலைவர் மகேஸ்வரி சரவணன், அறநிலையத்துறை இணை கமிஷனர் பாரதி உள்ளிட்ட இந்துசமய அறநிலையத்துறை அதிகாரி கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

;