districts

img

பிரதமர் மோடி பொய் பேசுவதில் மட்டுமே வல்லவர்

திண்டுக்கல், மே 29- தொழிலாளர் உரிமை கள் உள்ளிட்ட 14 அம்சக்  கோரிக்கைகளை வலி யுறுத்தி தென்காசியிலிருந்து திருச்சிராப்பள்ளி நோக்கி  நடைபயணம் மேற்கொண் டுள்ள சிஐடியு நடைபய ணக்குழுவினர் திண்டுக்கல் லில் பிரச்சாரம் மேற்கொண் டனர். சிஐடியு நடைபய ணத்தை வரவேற்று திண் டுக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நாகை மாலி பேசியதாவது:- மோடி ஆட்சிக்கு வந்த காலம் முதல் தொழிலாளர் நலச்சட்டங்களை சுருக்கி யுள்ளார். தொழிலாளர் நல னுக்கெதிராக மாற்றி முத லாளிகளுக்கு கார்ப்பரேட்டு களுக்கு சாதகமான சட்டங்க ளாக மாற்ற பிரதமர் மோடி துடித்துக் கொண்டிருக்கி றார்.  பாஜக ஆட்சிக்கு வந்தால் ரூ.15 லட்சம் ஒவ்  வொருவரின் வங்கிக் கணக்  கில் போடுவதாக சொன் னார்கள். பதினைந்து ரூபாய் கூட போடவில்லை. ஆண் டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை தருவேன்  என்றார்கள். ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் 18 கோடி  பேருக்கு வேலை வாய்ப்பு  வழங்கியிருக்க வேண்டும்.  ஆனால் அது நடக்கவில்லை. மோடி வாயைத் திறந்தால் பொய் தான் பேசுவார் என்ப தற்கு மேற்கண்டவை தான் உதாரணம். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் கால  வாக்குறுதிகளை நிறை வேற்றி வருகிறார். இன்னும் சில வாக்குறுதிகளை நிறை வேற்ற வேண்டும் எனக் கூறி யுள்ளார். அந்த வாக்குறுதி களில் சத்துணவு ஊழியர் கள், அங்கன்வாடி ஊழியர் கள், மக்களைத் தேடி மருத்  துவ ஊழியர்கள் உள்ளிட்ட பல தரப்பு உழைப்பாளி களின் கோரிக்கைகளும் உள்ளன. அவற்றையும் நிறைவேற்ற வேண்டும். பழைய ஓய்வூதியக் கோரி க்கையை நிறைவேற்ற வேண்டும். 60 வயதுக்கு மேல் ஒருவர் உடல் ரீதி யாகப் பணியாற்ற முடியாது. அவர்களது எதிர்காலம் கருதி பழைய பென்சன் வழங்கவேண்டும். இவ்வாறு அவர் பேசி னார்.