தூத்துக்குடி,டிச.8 தூத்துக்குடியில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் சண்முகையா எம்எல்ஏ பார்வை யிட்டு ஆய்வு செய்தார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி ராஜ பாளையம், மாதா நகர், பூ பாண்டியபுரம், பாண்டியபுரம், அன்னை வேளாங்கண்ணி நகர், ஆ. சண்முகபுரம், மற்றும் ஓட்டப்பிடா ரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக் குடி மாநகராட்சி பகுதிகளான மு்தம்மாள் காலனி, ஸ்டேட் பாங்க் காலனி, சங்கரபெரி ஹவுசிங் போர்டு, கேடிசி நகர் ஹவுசிங் போர்டு போன்ற பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையி னால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஓட்டப் பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகை யா எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மழை வெள்ளத்தை அகற்ற துரித நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜா, மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா, ஒன்றிய பொறியாளர்கள் தளவாய், ஹரிஷ், மாப்பி ள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவ ணகுமார், திமுக பகுதி செயலாளர் சிவக் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்