districts

செல்வ நாகரத்தினம் ஐபிஎஸ் மீது சட்டரீதியான நடவடிக்கையை விரைந்து எடுத்திடுக!

காவல்துறை டிஜிபிக்கு  மாதர் சங்கம் மனு

சென்னை,ஜூன் 4- பெண்ணை ஏமாற்றி பாலியல் ரீதியாக உறவு கொண்டும் உண்மை தெரிந்த பிறகு கொலை  மிரட்டல் விடுத்து அச்சுறுத்தி வரு கிற செல்வ நாகரத்தினம் ஐபிஎஸ் மீது சட்டரீதியான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்று  வலியுறுத்தி காவல்துறை டிஜிபிக்கு அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் மனு அளித் துள்ளது.   இதுகுறித்து மாதர் சங்கத்தின்  மாநிலத் தலைவர் எஸ்.வாலண்  டினா, மாநிலப் பொதுச்செயலா ளர் அ.ராதிகா ஆகியோர்  காவல் துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  கடந்த சில நாட்களாக சமூக  வலைதளங்களிலும் செய்தித் தாள்களிலும் வார இதழ்களிலும்  தமிழகத்தில் பணியாற்றும் செல்வ நாகரத்தினம் ஐபிஎஸ்  மீதான பாலி யல் குற்றச்சாட்டு புகார்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. இது சம்பந்தமாக சட்ட ரீதியாகவும்,  துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்  திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் சார்பாக வலியுறுத்துகிறோம். சமூக வலைதளத்தின் மூலம்  ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டு இணக்கமாக பேசி, தனது  மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்வதாக பொய்யான தகவலை யும் சொல்லி, திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் உறவு வைத்தார் என்ற புகார் பாதிக்கப்பட்ட பெண்ணால் அளிக்கப்பட்டுள்ளது. செல்வ நாக ரத்தினம் தன்னை ஏமாற்றியதை புரிந்து கொண்டு அந்தப் பெண் கேள்வி எழுப்பிய போது, சுட்டுக் கொன்று விடுவதாக மிரட்டியதாக வும் தகவல்கள் வெளிவந்துள் ளன. பொய்யான தகவலின் அடிப்ப டையில் பெண்ணிடம் பெறப் பட்ட சம்மதம் முறையான சம்மதம்  அல்ல என்பதை சுட்டிக்காட்டு கிறோம்

தங்களுக்கு வந்த புகாரின்  அடிப்படையில் சிபிசிஐடி விசா ரணைக்கு உத்தரவிடப்பட்டதும், சிபிசிஐடி, செல்வ நகரத்தினம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க  பரிந்துரைத்ததும், அதை எதிர்த்து  அவர் மத்திய நிர்வாக தீர்ப்பா யத்தை அணுகி அவரது கோரிக்கை  நிராகரிக்கப்பட்டதும் ஊடகங்க ளில் செய்திகளாக வெளிவந்துள் ளன.

பாதிக்கப்பட்ட  பெண்ணுக்கு ஆபத்து?

தற்போது செல்வ நாகரத்தினம் நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக தெரிய வருகிறது. இதற்கிடையே பல்வேறு நபர்கள் மூலமாக , பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மிரட்ட லும் புகாரை வாபஸ் வாங்கு வதற்கு பணம் கொடுப்பதற்கான முயற்சியும் நடந்து வருகிற சூழ லில், பாதிக்கப்பட்ட பெண் தற்  போது உறவினர்கள், நண்பர் களோடு தொடர்பில் இல்லை. எனவே அவருக்கு ஏதேனும் ஆபத்து நிகழ்ந்திருக்கிறதா என்கிற  கவலையும் எழுந்துள்ளது. இத்தகைய சூழலில் செல்வ  நாகரத்தினத்தின் மீது  சட்ட ரீதி யான மற்றும் துறை ரீதியான நட வடிக்கைகளை விரைந்து எடுத்திட வேண்டும். தன் மீதான  நடவடிக்கை யில் இருந்து தப்பிப்பதற்காக அனைத்து முகமைகளையும் அவர் அணுகிக் கொண்டே இருப்பார். அதுவரை அவர் மீது எந்த நடவ டிக்கையும் எடுக்க முடியாது என்  பது நியாயமல்ல. பாதிக்கப்பட்ட பெண்களை இது, நீதிக்கான போராட்டத்தில் நம்பிக்கை இழக்கச் செய்யும். குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரி  தனது பொறுப்பை தவறாக பயன்  படுத்தி குற்றம் இழைப்பது வன்மை யான கண்டனத்துக்குரியது. எனவே செல்வநாகரத்தி னத்தின் மீது உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட பெண்  ணுக்கு அனைத்துவித பாதுகாப்பி னையும் அளிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.