சிவகங்கை. செப்.15- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை தலைமையில் ஒன்றிய குழு துணைத் தலைவர் முத்துசாமி முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றிய ஆணையாளர் , வட்டார வளர்ச்சி அலுவலர், மேலாளர் தவமணி, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை ,முருகேசன், சோமசுந்தரம், மலைச்சாமி, பாண்டியம்மாள் ,மஞ்சு குமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன் பேசுகையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு வைகையில் கடந்த ஒரு மாத காலமாக தண்ணீர் சென்று கொண்டி ருக்கிறது .ஆனால் இப்பகுதியில் இருக்கக்கூடிய நான்கு கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லாத அவல நிலை போகவில்லை. மானாமதுரை, கீழமேல்குடி, கிருங்காக்கோட்டை. கால்பிரவு ஆகிய நான்கு கண்மாய்களுக்கு வைகை ஆற்று தண்ணீர் செல்லவில்லை இதற்குரிய நடவடிக்கையை பொதுப்பணித்துறை எடுக்க வேண்டும் . தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒன்றியக்குழு உறுப்பினர் அண்ணாதுரை பேசுகையில், 6 அடி பள்ளமாகவும் கால்வாய் மேடாகவும் இருப்பதால் தண்ணீர் செல்வது பிரச்சனையாக இருந்து வருகிறது .இதனை சரி செய்ய வேண்டும் என்று பொதுப்பணித்துறைக்கு மானா மதுரை ஊராட்சி ஒன்றிய குழு பரிந்துரைக்கலாம் என்று கூறினார். வேம்பத்தூர் ஊராட்சி அலுவலக கட்டிடத்தில் தான் ரூ.94 லட்சம் செலவில் தண்ணீர் சுத்திக ரிப்பு இயந்திரம் செயல்படாமால் உள்ளது என்று முருகேசன் சுட்டிக்காட்டினார். பல் வேறு ஊராட்சிக ளில் பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக அவர்களின் கணவர்களே தலைவர்களின் இருக்ககைகளில் அமர்ந்து கூட்டம் நடத்துவதை தடுக்க வேண்டும். சுதந்திர தினத்தன்று தேசியக் பெண் ஊராட்சித் தலைவர்களின் கணவர்களே பெரும்பாலும் தேசியக் கொடியேற்றினர் என்றும் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் குறித்தும் அண்ணாத்துரை கேள்வி எழுப்பினார். இதனை ஏற்ற ஒன்றிய பெருந்தலைவர், கூட்டத்திற்கு வராத அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.