districts

மதுரை முக்கிய செய்திகள்

தோழர் க.இருளாயி காலமானார்

மதுரை,செப்.8- மதுரை புறநகர் மாவட்டம் நாகமலை பகுதி கரடி பட்டியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைச்செயலா ளர் தோழர்  இருளாயி காலமானார்.   தோழர் இருளாயி மாதர் சங்கத்தை கட்டுவதிலும் கட்சி யின் பல்வேறு போராட்டங்களிலும் முன்னின்று பங்கேற்ற வர்.  அன்னாரது மறைவுச் செய்தியறிந்து கட்சி மற்றும் மாதர் சங்கத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.  தோழர் இருளாயின் கணவர் தோழர் கரடிராஜ். இவர்களுக்கு வீரணன், மலைச்சாமி ஆகிய இரண்டு மகன் கள் உள்ளனர். இவர்கள் கட்சி உறுப்பினர்கள். ஒரு மகளும் உள்ளனர். மலைச்சாமி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளைச் செயலாளர் ஆவார்.

நத்தத்தில் வாலிபரை குத்திக்கொன்றவர் கைது

நத்தம், செப்.8- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காமராஜர் நகரை சேர்ந்த வர் விஜயன். இவரது மகன் விஷ்ணு (26). இவர் நாய்  வளர்த்து வருகிறார்.அதே பகுதியை சேர்ந்தவர் முத்தன் (38).இவரது கோழியை விஷ்ணுவின் நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திர மடைந்த முத்தன், கத்தியால் விஷ்ணுவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த விஷ்ணு நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். மேலும் இச்சம்பவம் தொடர் பாக காவல் ஆய்வாளர்  தங்கமுனியசாமி வழக்கு பதிவு செய்து முத்தனை கைது செய்தனர். 

நத்தத்தில் இளம்பெண்  தற்கொலை: உறவினர்கள் மறியல்

நத்தம், செப்.8- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த வர் சீமான் என்ற செல்லையா. இவரது மனைவி சிந்து. (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகி றது.இவர்கள் குடும்பத்திற்குள் அடிக்கடி பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிந்து சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் சுகந்தி, காவல் ஆய்வாளர்   தங்கமுனியசாமி மற்றும் போலீசார்  மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை  நடத்தினர்.இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என கூறியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. திருமண மாகி 4 வருடமே ஆவதால் திண்டுக்கல் கோட்டாட்சியர் பிரேம்குமார் நேரில் விசாரணை நடத்தினார்.

முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 137 அடியை கடந்தது

தேனி,செப்.8-   நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால்  அணைக்கு நீர்வரத்து அதிக ரித்து, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியை கடந்தது.  வியாழனன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 137.35 அடியாக உள்ளது. நீர் வரத்து 2497 கன அடியாக வும், திறப்பு 1867 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 6458 மி.கன அடியாக உள்ளது.  கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.95 அடியாக இருந்தபோது அணையில் இருந்து கேரள பகுதிக்கு உபரிநீர் திறக் கப்பட்டது. இதனால் ரூல்கர்வ் முறைப் படி அணையில் இருந்து கேரளாவுக்கு உபரி நீர் திறப்பதை தவிர்க்க தமிழக பகு திக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வைகை அணையில் நீர் தேக்கப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 137 அடியை கடந்துள்ளதால் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை 140.90 அடியாக நீர்தேக்க நடவ டிக்கை எடுக்கவும் அதனைத் தொடர்ந்து 142 அடி வரை நீர் தேக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வைகை அணையின் நீர்மட்டம் 70.70 அடியாக உள்ளது. நீர் வரத்து 2220 கன அடி. திறப்பு 2360 கன அடி இருப்பு 6013 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடி. நீர்வரத்து 460 கனஅடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.54 அடி. வரத்து 111 கனஅடி. திறப்பு 3 கன அடியாக உள்ளது. மழையளவு பெரியாறு- 22, தேக்கடி- 9.2, உத்தம பாளையம்- 1.2, வீரபாண்டி -3.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

 மகர்நோம்பு பொட்டலில் பைக்குகளுக்கு  கட்டணம் வசூலிப்பதை நிறுத்துக!

சிபிஎம் வலியுறுத்தல்

சிவகங்கை, செப்.8- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சிக்குட் பட்ட  மகர்நோம்பு பொட்டலில் நிறுத்தப்படுகிற இரு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்வதை தடுத்த நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காரைக்குடி தாலுகா செய லாளர் அழகர்சாமி ஆணையாளரிடம்  புகார் அளித்துள்ளார்.  இதற்கு முன்னர் மனு கொடுக்கும்போது ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகை போட்டிருக்கிற பகுதி யில் நிறுத்தப்படுகிற இரு சக்கர வாகனங்களுக்குத் தான் கட்டணம் வசூல் செய்ய உத்தரவு உள்ளது. அந்த உத்தரவு நகல் தருவதாக ஆணையர் சொன் னார். ஆனால் தற்போதுவரை தரவில்லை என்றும், கட்டணம் வசூல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும்  இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அழகர்சாமி வலியுறுத்தினார்.

நாளை இராமநாதபுரத்தில் பொது விநியோக குறைதீர் முகாம்

இராமநாதபுரம்,செப்.8- இராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களி லும் செப்டம்பர் 10 அன்று  பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடைபெறுகிறது.  இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம் -  அச்சுந்தன்வயல் “இ” சேவை மைய கட்டிடம் / இரா மேஸ்வரம் வட்டம் - நடராஜபுரம் - நியாயவிலைக் கடைகட்டிடம் / திருவாடானை வட்டம் - பதனக்குடி நியாய விலைக்கடை / பரமக்குடி வட்டம் -  மஞ்சக்கொல்லை “இ” சேவை மைய கட்டிடம் / முதுகுளத்தூர் வட்டம் - கொழுந்துரை  “இ” சேவை மையக் கட்டிடம் / கடலாடி  வட்டம் - நரிப்பையூர் நியாயவிலைக் கட்டிடம்/ கமுதி வட்டம் - கீழராமநதி ஊராட்சிமன்ற கட்டிடம், கீழக்கரை வட்டம் - குத்துக்கல்வலசை  நியாயவிலைக்கடை (கலை யரங்கம்) / ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் - செங்குடி நியாய விலைக் கடை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்க ளுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு/ மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்க ளை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப் படும்.  மேலும் நியாயவிலைக்கடைகளில்  பொருள்பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய் வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொது விநி யோகக்கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தை யில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இராமநாதபுரம்  மாவட்டத்திலுள்ள 09 வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் எதிர் வரும் செப்டம்பர் 10 சனிக்கிழமையன்று காலை 10 மணி யளவில்  நடைபெறவுள்ள குறைதீர் முகாமில் மனுக்க ளை அளித்து இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு  மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளார்.

தேனியில் வீட்டின் பூட்டை  உடைத்து 60 பவுன் நகைக் கொள்ளை

தேனி,செப்.8-  தேனி பங்கஜம் ஹவுஸ் தெருவைச் சேர்ந்தவர் ராஜாராம். இவர் மஞ்சள் வியாபாரம் செய்து வருகிறார். செப்டம்பர் 7 அன்று  தூத்துக்குடியில் இருக்கும் தனது மகளை பார்ப்பதற்கு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றுள்ளார். பின்னர் 8 ஆம்  காலை புறப்படும்போது தனது வீட்டில் வேலை செய்யும் உமா என்பவர் வீட்டின் கதவு பூட்டு உடைந்த நிலையில் இருப்பதாக போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.  தேனி வந்து தனது வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டு பிரோவில் வைத்திருந்த  60 பவுன் தங்க நகைகளை காணவில்லை என்றும் யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் இரவு நேரங்களில் பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்று திருடியதாக ராஜாராம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிலக்கோட்டையில் ஸ்டூடியோவை உடைத்து பணம்-பொருட்கள் திருட்டு

சின்னாளப்பட்டி செப்.8- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் நிலை யம் அருகே வத்தலக்குண்டு சாலையில் இராஜசேகர் என்பவர் விக்னேஷ் ஸ்டுடியோ நடத்தி வருகிறார். அவர் திருமண நிகழ்வுக்கு சென்று விட்டு வியாழ னன்று மதியம் கடையை திறந்து பார்த்தபோது கடையின் இரண்டு பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தன. கடையின் லாக்கரில் வைக்கப்பட்ட ரொக்கம் பத்தாயிரம்  ரூபாய் மற்றும் இரண்டு கேமராக்கள் பென்டிரைவ்கள் ரேம் மற்றும் லைட் உட்பட ஸ்டூடியோ உபகரணங்களை காணா மல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  இதுகுறித்து நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் குருவெங்கட் மற்றும் சார்பு ஆய்வாளர் தயாநிதி ஆகி யோர் ஸ்டுடியோவை நேரில் பார்வையிட்டனர்.மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

ஊராட்சி செயலர்களை புறக்கணிக்கும்  சிவகங்கை ஆட்சியரின் நேர்முக உதவியாளர்  தமிழக முதல்வருக்கு புகார் மனு

 சிவகங்கை, செப்.8- சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் வளர்ச்சித்துறை நேர்முக உதவியாளரின் தாம தமான செயல்பாடு தொடர் பாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக  சங்கத் தின் மாவட்டத் தலைவர் வேலுச்சாமி, மாவட்டச் செய லாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழக முதல்வ ருக்கு புகார் மனு அனுப்பி யுள்ளனர்.   அந்த புகாரில், ஊராட்சி செயலர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரு கின்றனர். ஊராட்சி செய லர்களுக்கு பதவி உயர்வு பட்டியல், 2018 முதல் 4 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு இணை யான நிலையில் உள்ளவர்க ளுக்கு ஊதியம் வழங்குவ தும் தாமதமாகி உள்ளது.அலுவலர்களை அடிக்கடி மாறுதல் செய்வதை நிறுத்த வேண்டும். அலுவலக பணி களை வெளிநபரைக் கொண்டு செய்வதை அனு மதிக்க கூடாது. இச் செயல் வன்மையாக கண்டிக்கத் தக்கது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இராஜபாளையம் பகுதியில் கொப்பரை  தேங்காய் கொள்முதல் செய்ய கால நீட்டிப்பு!

இராஜபாளையம் செப் 8 விருதுநகர் விற்பனைக்குழு வின் கீழ் இயங்கும் இராஜபாளை யம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1200 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து  31-07-2022 வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலை யில் தற்போது 31-09-2022 வரை ஒன்றிய அரசால்  காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால்  31-09-2022 அரவை கொப்பரை தேங் காய் குறைந்த பட்ச ஆதார விலை யில்  கொள்முதல் செய்யப்பட உள்ளது. தரப் பரிசோதனையின் அடிப்படை யில், அரவை கொப்ப ரையில் அயல் பொருள்கள் ஒரு சதவீதத்திற்கு மிகாமலும், பூஞ்சா ணம் தாக்கிய மற்றும் கருப்பு நிற கொப்பரை 10 சதவீதத்திற்கு மிகாம லும், சுருக்கம் கொண்ட கொப்பரை கள் 10 சதவீதத்திற்கு மிகாமலும், சில்லு 10 சதவீதத்திற்கு மிகாமலும், ஈரப்பதம் 6 சதவீதத்திற்கு மிகாம லும் நன்கு உலர வைத்து நியாய மான சராசரி தரங்களுடன்  இராஜ பாளையம் ஒழுங்குமுறை விற்ப னைக் கூடத்திற்கு அரவை கொப்ப ரைத் தேங்காயினை கொண்டு வந்து கிலோவுக்கு ரூ.105.90 என்ற குறைந்தபட்ச ஆதார விலையில் விற்பனை செய்து பயன்பெறலாம். மேலும், விவசாயிகளின் வங்கி கணக்கில், அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டதற்கான தொகை நேரடியாக வரவு வைக்கப் படும். விருதுநகர் மாவட்டத்தில் 30-09-2022  வரை அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்படவுள்ள நிலையில், இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் தென்னை சாகுபடி விவசாயிகள் தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் பதிவு செய்து பயன் பெறுமாறு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி  கேட்டுக் கொண்டுள்ளார். இராஜ பாளையம், திருவில்லி புத்தூர் வட்டார பகுதிகளைச் சார்ந்த  தென்னை சாகுபடி விவசாயிகள் இராஜபாளையம் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்கா ணிப்பாளரை 9952341770/ 04563-222615 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள் ளப்படுகிறது.  வத்திராயிருப்பு வட்டார தென்னை சாகுபடி விவசாயிகள்; இராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற் பார்வை யாளரை 9894622582 என்ற எண்ணிற்கும் மற்றும் வத்திரா யிருப்பு விற்பனைக்கூட மேற் பார்வையாளரை 8248325233 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

தொடர் மழையால் அய்யலூரில் 10 ஆயிரம் ஏக்கர் தக்காளி செடிகள் நாசம்

திண்டுக்கல்,செப்.8- தொடர் மழையின் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பகுதி யில் பத்தாயிரம் ஏக்கர்  தக்காளி செடிகள் நாசமானது  அய்யலூர் தக்காளி சந்தைக்கு தக்காளி வரத்து குறைவு காரண மாக பல மடங்கு விலை அதிகரித்துள்ளது திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் தக்காளி சந்தை உள்ளது இந்த சந்தைக்கு சுற்றுவட்டார கிராமங்களான கடவூர்,  காக்காயனூர்,  காக்காயக்கவுண்டனூர்,  மலைப்பட்டி,  கொம்பேறிபட்டி,  புதுப்பட்டி, சுக்காம்பட்டி,  வடமதுரை,  புத்தூர் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அய்யலூர் பேரூராட்சி மற்றும் வட மதுரை ஊராட்சி ஒன்றியம் கிராமங்களில் தக்காளி விவசாயம் தான் பிரதான விவசாயமாக உள்ளது கிட்டத்தட்ட பத்தா யிரம் ஏக்கரில் தக்காளி விளைவிக்கப்படு கிறது திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் தக்காளி பயிர் கடுமையாக சேதம் அடைந்துள்ளது பொதுவாக தக்காளி விளைவதற்கு நல்ல வெயில் தேவை ஆனால் கடும் மழையில் பூக்கள் உதிர்ந்து தக்காளி காய்கள் சேதம் அடைந்து  வரத்து குறைந்துள்ளது  இந்த மார்க்கெட்டுக்கு தினசரி 80 முதல் 100 டன் தக்காளி வரத்து இருக்கும் ஆனால் தொடர் மழை காரணமாக தற்போது பத்து டன் தக்காளி தான் வரு கிறது கடந்த வாரம் வரை  14 கிலோ எடையுள்ள ஒரு தக்காளி பெட்டி ரூபாய் 75 முதல் 100 வரை விற்கப்பட்டது அதாவது 1 கிலோ 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை மட்டுமே விலை போனது   தற்போது ஒரு வார காலமாக தொடர் மழையால் 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி  ரூ. 600 முதல் 700 வரை  விலை போகிறது அதாவது ஒரு கிலோ சந்தையிலேயே 50 ரூபாய் முதல் 60 ரூக்கு  விற்பனையானது.  மற்ற நாட்களில் ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும்  ஆனால் அந்த மாநிலங்களிலும் தொடர் மழை காரணமாக தக்காளி வரத்து  குறைந்துள்ளது. இதனால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது இதனால் விவசாயிகளுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியை தந்தாலும் பத்தாயிரம் ஏக்கர் விளை நிலத்தில் தக்காளி பெயர் நாசமாகி உள்ளதை நினைத்து விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.


 

;