districts

மதுரை முக்கிய செய்திகள்

மதுரையில் ‘பொங்கல்’ வைக்கிறார்  மோடி

மதுரை, டிச.31-  தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தை 1 ஆம் தேதி (ஜனவரி 14) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாஜக சார்பில் மதுரையில் ‘மோடி பொங்கல்’ நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது.  இதன்படி, ஜனவரி 12 ஆம் தேதி நடைபெறும் பொங்கல் பண்டிகை நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். இந்நிகழ்ச்சியினை நடத்த மாநில பொதுச் செயலாளர் கரு.  நாகராஜன் தலைமையில் மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று  தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இருசக்கர வாகனம் திருட்டு

திருவில்லிபுத்தூர், டிச.31- திருவில்லிபுத்தூர் அருகே உள்ள வைத்திலிங்கபுரம் தேவர் தெருவில் வசிப்பவர் வைரமுத்து (31). கூலி தொழி லாளி. இவர் நிதி நிறுவனம் மூலம் கடன் பெற்று ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள இரு சக்கர வாகனத்தை வாங்கியிருந்தார்.  சம்பவத்தன்று இரவு வைரமுத்து தனது இரு சக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு மறுநாள் காலை வந்து பார்த்த பொழுது மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து அவர் வன்னி யம்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளை கொரோனா தடுப்பூசி முகாம் : தேனியில் 388 இடங்களில் நடக்கிறது

தேனி, டிச.31- தேனி மாவட்டத்தில் ஞாயிறன்று 388 இடங்களில் 17-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள்  நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் தெரிவித்துள்ளார். ஆண்டிபட்டி வட்டாரத்தில் 63 இடங்க ளிலும், போடிநாயக்கனூர் வட்டாரத்தில் 60 இடங்களிலும், சின்னமனூர் வட்டா ரத்தில் 47 இடங்களிலும், கம்பம் பகுதி யில் 44 இடங்களிலும், க.மயிலாடும் பாறை ஒன்றியத்தில் 27 இடங்களிலும், பெரியகுளம் பகுதியில் 60 இடங்களிலும், தேனி வட்டாரத்தில் 49 இடங்களிலும், உத்தமபாளையம் வட்டத்தில் 38 இடங்க ளிலும் என மொத்தம் 388 இடங்கள் தேர்வு  செய்யப்பட்டு, மாபெரும் தடுப்பூசி முகாம்களின் மூலம் 75,400 கோவி ஷீல்டு தடுப்பூசிகளும், 20,150 கோவாக் சின் தடுப்பூசிகளும் என மொத்தம் 95,550 தடுப்பூசிகள் செலுத்திட திட்ட மிடப்பட்டுள்ளது.

கார் மோதி முதியவர் படுகாயம்

திருவில்லிபுத்தூர், டிச.31-  வத்திராயிருப்பு வெள்ளாளர் நடுத் தெருவில் வசிப்பவர் வேல்சாமி (75). இவர் இங்கு உள்ள கோவில் ஒன்றில் பூசாரியாக பணியாற்றி வருகிறார்.  சம்பவத்தன்று கோவிலுக்கு தேவை யான பூஜை சாமான்களை வாங்கிக் கொண்டு கோபாலபுரத்தில் இருந்து வத்தி ராயிருப்பு இருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது சேது நாராயணபுரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவர் ஓட்டி வந்த கார் வேல்சாமி மீது மோதியது.  இதில் வேல்சாமி படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வத்திராயிருப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்கள் போராட்டம் வெற்றி:  ராஜகம்பீரத்தில் நின்று சென்றது ரயில்

மானாமதுரை, டிச.31-  மக்கள் போராட்ட கோரிக்கை ஏற்று சிவகங்கை மாவட்டம் ராஜ கம்பீரத்தில் ரயில் நின்று சென்றது.  மானாமதுரையிலிருந்து மதுரை செல்கிற ரயில்வே வழித்தடத்தில் ராஜ கம்பீரம் உள்ளது. இங்கு கொரோனா காலம் முன்பு ரயில் நின்று சென்றது. கொரோனாவிற்கு பின்பு ராஜகம் பீரத்தில் பயணிகள் ரயிலை நிறுத்தாமல் இயக்கப்பட்டது.  இதன் காரணமாக ராஜகம்பீரம் ஊராட்சி மன்றத் தலைவர் முசிபர் ரஹ்மான் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலா ளர் ஆண்டி முன்னிலையில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.  இது தொடர்பாக மானாமதுரை வட் டாட்சியர் தமிழரசன் தலைமையில் சமா தானக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரயில்வே நிர்வாகம் ரயில் ராஜகம்பீரம் ரயில் நிலையத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கொடுத்தனர்.  இதன் அடிப்படையில் இராமேஸ் வரம்-மதுரை ரயில் ராஜகம்பீரத்தில் நின்று சென்றது. இந்த ரயிலுக்கு ராஜ கம்பீரம் ஊராட்சி மன்ற தலைவர் முசிபர்ரஹ்மான், தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் தலைவர் காசிராஜன் மற்றும் பலர் வரவேற்பு கொடுத்தனர்.

புதிய கண்டுபிடிப்பு, தொழில் முனைவு இந்தியாவிலேயே  6வது இடம் பிடித்து  கலசலிங்கம் 

பல்கலை., சாதனை திருவில்லிபுத்தூர், டிச.31- பல்கலைக்கழகங்களின் புதுமை மற்றும் தொழில் முனைவு மேம்பாட்டை ஊக்குவிக்கும் சாதனைகளுக்கான பட்டியலில் திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகம் இந்தியாவிலேயே 6வது இடத்தைப் பிடித்து சாதனை செய்துள்ளது.  ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும்  புத்தாக்கப் பிரிவு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சில் மூலம் முக்கிய உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்க ளின் புதுமை மற்றும் தொழில் முனைவு மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கும், ஆதரவளிப் பதற்கும் கண்டுபிடிப்பு சாதனைகளுக்கான நிறு வனம் என்ற ‘‘அடல் தரவரிசை’’ கடந்த 2019ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் சுபாஷ் சர்கார் வெளியிட்டார். இதன்படி, பல்கலைக்கழகங்கள் பட்டியலில் கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிகர்நிலை பல்கலைக்கழகம் இந்தியாவிலேயே 6வது இடத்ததைப் பெற்றுள்ளது. மேலும் மாநில அளவில் இரண்டாவது இடம் பெற்றுள்ளது. கலசலிங்கம் பல்கலை துணைத்தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த், துணைவேந்தர் முனை வர் ஆர்.நாகராஜ், பதிவாளர் முனைவர் வெ.வாசுதே வன் ஆகியோர் அனைத்து பேராசிரியர்களையும், அலு வலர்களையும், மாணவர்களையும் பாராட்டினர்.

அரசு நிலம் அபகரிப்பு விவகாரம் : உயர் அதிகாரிகள் சிக்குகிறார்கள்

தேனி, டிச.31- பெரியகுளம் அருகே அதிமுக ஒருங்கி ணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதர வாளர் அன்னபிரகாஷ் உள்ளிட்டோர் அரசு நிலத்தை அபகரித்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சி யர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதி காரிகள் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை யில் இடம் பெறுகிறார்கள். பெரியகுளம் வட்டத்தில் வடவீரநாயக்கன் பட்டியில் 109 ஏக்கர், தாமரைக்குளத்தில் 60 ஏக்கர், கெங்குவார்பட்டியில் 13 ஏக்கர் என மொத்தம் 182 ஏக்கர் அரசு நிலங்கள் அபகரிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த நிலங்களை அதிகாரிகள் துணையுடன் பெரியகுளம் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் மற்றும் தனி நபர்கள் சிலர் அபகரித்து தங்களின் பெயரில் பட்டா பெற்றனர். இதற்கு உடந்தையாக இருந்த 2 தாசில்தார் கள் உள்பட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட னர். மோசடியாக வழங்கப்பட்ட பட்டாக்கள் ரத்து  செய்யப்பட்டு மீண்டும் அந்த நிலங்கள் அரசு நிலங்களாக மாற்றப்பட்டன.  மேலும், பெரியகுளம் சார் ஆட்சியர் ரிஷப் கொடுத்த புகார்களின் பேரில், பெரியகுளத்தில் ஆர்.டி.ஓ.வாக பணியாற்றிய ஆனந்தி, ஜெயப் பிரிதா, தாசில்தார்கள் ரத்தினமாலா, கிருஷ்ண குமார், மண்டல துணை தாசில்தார்கள் மோகன் ராம், சஞ்சீவ் காந்தி, நில அளவையர்கள் பிச்சை மணி, சக்திவேல், வடவீரநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், நில அளவையரின் உதவியாளர் அழகர், மண்டல துணை தாசில் தாரின் உதவியாளர் ராஜேஷ் கண்ணன், நிலத்தை அபகரித்த அன்னபிரகாஷ், முத்துவேல் பாண்டி யன், போஸ் ஆகிய 14 பேர் உள்பட பலர் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வந்தனர்.  சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றம் இந்நிலையில், இந்த வழக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு பின் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது .வழக்கு பதிவு செய்யப்பட்ட அதிகாரிகள் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர் .அவர்களுக்கு முன் ஜாமீன் மறுக்கப் பட்டு, சிபிசிஐடி காவல்துறையினர் முன்னிலை யில் ஆஜராகும்படி நீதிமன்றம் அறிவுறுத்தியது.இந்த வழக்கை முறைப்படி துணை கண்காணிப் பாளர் நிலையிலான அதிகாரி வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். 10 மாவட்டங்களுக்கு துணை கண்காணிப்பாளர் ஒருவர் இருப்பதால் விசாரணையில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதிகாரிகள் சிக்குகிறார்கள் 2015 ஆம் ஆண்டில் வடவீரநாயக்கன்பட்டியில் அரசுக்கு சொந்தமான 80 ஏக்கர் நிலத்தில் உள்ள மலையை காணவில்லை என நீதிமன்றத்தில் தனி நபர் கொடுத்த புகாரின் பேரில்  அதிமுக பிர முகர் அன்னபிரகாஷுக்கு    அப்போதைய கோட் டாட்சியரால் ரூ.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த அபராத தொகை கூட முழுமையாக வசூ லிக்க முடியாத வருவாய்த்துறையினர், அதே இடத்தை பட்டா போட்டு கொடுத்ததுதான் வேடிக்கை. இந்த நிலம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ,மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரது குடியிருப்புகளுக்கு அருகாமையில் உள்ளது. ஆண்டு தோறும் நடைபெறும் வருவாய் தீர்வாயத்தில் ,நிலம் தொடர்பான ஆவணங்களை சரிபார்க்கும் நிகழ்வில் ஆட்சியர் ,துணை ஆட்சி யர் நிலையிலான அலுவலர் பங்கேற்று கை யொப்பமிட்டுள்ளனர் .கடந்த ஆண்டு கூட ஆன் லைன் மூலம் வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. அரசு நிலம் தொடர்பான ஆவணத்தையும் ,அரசு நிலத்தையும் கண்காணிக்க மாவட்ட அளவிலான அதிகாரிகள் தவறிவிட்டனர். மேலும் முறைகேடாக பட்டா மாறுதல் பெற்று நிலம் அபகரிக்கப்பட்டதாக தேனி அருகே உப்பார் பட்டியை  சேர்ந்த பிரமுகர் ஒருவர் கடந்த சில  ஆண்டு களாக அதிகாரிகள் மேல் தொடர்ந்து புகார் அளித்துள்ளார். அதை விசாரிக்காமல் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கிடப்பில் போட்டு, முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்துள் ளனர். எனவே மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை யினர் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கி டும் தகவல் கிடைத்துள்ளதாகவும், கடந்த 4 ஆண்டுகளில் வருவாய் தீர்வாயத்தில் பங்கேற்ற அலுவலர்கள், கனிம வள அதிகாரிகள் பட்டியல் உள்ளிட்ட பட்டியல்கள் சிபிசிஐடி காவல்துறை வசம் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது.