districts

மதுரை முக்கிய செய்திகள்

ஓய்வூதியர்கள் தின கருத்தரங்கு 

நாகர்கோவில், டிச.21-  ஒன்றிய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்க ளின் கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கி ணைப்புக் குழுவின் சார்பில், தேசிய ஓய்வூதியர் தினக் கருத்தரங்கம், வெள்ளிக்கிழமையன்று நாகர்கோவிலில் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்டத் தலைவர், பி.இராஜநாயகம் கருத்தரங் கத்திற்கு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி.எம். ஐவின், வரவேற்பு ரையாற்றினார். பின்னர் ‘ஓய்வூதியர்க ளும் சாவல்களும்’ என்ற தலைப்பில் தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தலை வர் எஸ்.ராமச்சந்திரன் கருத்துரை வழங்கினார். பொருளாளர் ஆர். பிரான்சிஸ் நன்றி நவின்றார். கருத்த ரங்கில் அனைத்துத்துறை ஓய்வூதியர் கள் 150 பேர் கலந்து கொண்டனர்.

சமூக வலைதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு 

தூத்துக்குடி,டிச.20 தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மர்காஷிஸ் நகரில் உள்ள ஜெயராஜ் அன்ன பாக்கியம் பொறியியல் கல்லூரி யில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மாணவ மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் முன்னிலையில் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமை யில் நடை பெற்றது.

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை கோட்டாட்சியர் விசாரணை

தூத்துக்குடி, டிச. 21 தூத்துக்குடி அருகே காதல் திருமணம் செய்த 11 மாதங்களில் இளம்பெண் தூக் கிட்டு உயிரிழந்தது தொடர்பாக கோட் டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி அருகே யுள்ள சாயர்புரம், சின்ன நட்டாத்தி  கிராமம், முத்தராம்மன் கோவில் தெரு வைச் சேர்ந்தவர் விஜயவர்மன். இவரது மனைவி சேர்மகனி (20). இந்த தம்பதி யர் கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சேர்ம கனிக்கு குறை பிரசவத்தில் குழந்தை பிறந்து இறந்து விட்டது. இதனால் மனவேதனையில் இருந்து வந்த சேர்மகனி திங்களன்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண் டார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேஷன் வழக்குப் பதிந்து விசா ரணை நடத்தி வருகிறார். மேலும் திரு மணமாகி 11 மாதங்களில் அவர் உயிரி ழந்துள்ளதால் சம்பவம் குறித்து கோட்டாட் சியர் மேல் விசாரணை நடத்திவருகிறார்.

குறைதீர் கூட்டம்

நாகர்கோவில், டிச.21- டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் 22.12.2021 புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியரக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமை யில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவ சாயிகளிடம் இருந்து நவம்பர் மாதம் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக் களுக்கான பதில்கள் வழங்கப்படும். மேலும் விவசாயிகளின் விவசாயம் தொ டர்பான கோரிக்கைகள் மாவட்ட ஆட்சிய ரால் நேரில் பெறப்படும். கோரிக்கை மனுக்கள் பதிவுசெய்து ஒப்புகை பெறும் வசதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் செய்யப்பட்டிருக்கும். மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொள் ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சுவர் இடிந்து மூதாட்டி பலி

பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரது மனைவியான மகிழம்மாள் (65). கணவர் உயிரிழந்த நிலையில் அதே பகுதியில் வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டினுள் இருந்த சுவர் ஒன்று எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள் ளது. இதில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி மூதாட்டி மகிழம்மாள் உயிரிழந்தார். மதிச்சியம் காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளை வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம்

நாகர்கோவில்,டிச. 21 கன்னியாகுமரிமாவட்டத்தில்தமிழ்நாடுமாநிலஊரக/நகர்புறவாழ்வாதார இயக்கத்தின்கீழ்படித்த வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுதரும் பொருட்டுவட்டாரஅளவிலானவேலைவாய்ப்புமுகாம் 23.12.2021 அன்றுஒய்.எம்.சி.எ., மார்த்தாண்டத்தில் காலை 10.00 மணி முதல்மாலை 4.00 மணிவரை நடைபெற வுள்ளது. இம்முகாமில் உள்ளூர் மற்றும் சென்னை, திருவனந்தபுரம், பெங்க ளூரு போன்ற பெரு நகரங்களிலிருந்து பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க உள்ள னர். இவ்வேலை வாய்ப்பு முகாமில் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த 10-ஆம்வகுப்பு முதல் தொழிற் பயிற்சி(ITI), பட்டப்படிப்பு, டிப்ளமோ இன்பார்மஸி, நர்சிங், அனைத்து இளங் கலை மற்றும் முதுகலை (கலைஅறி வியல் மற்றும் பொறியியல்) வரை படித்த 35 வயதிற்குட்பட்ட ஆண்/பெண் இருபாலரும் தங்களது கல்வி சான்றி தழ், சாதிசான்றிதழ், குடும்பஅட்டை, இதரதகுதி சான்று (அசல்மற்றும்நகல்) மற்றும் புகைப்படங்களுடன் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அலுவலக முகவரி: திட்டஇயக்குநர்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இணைப்புகட்டிடம், இரண்டாம்தளம், நாகர்கோவில் -1. தொடர்புக்கு: 04652 - 279275 /278449. மின்னஞ்சல்: dpiu_kki@yahoo.com.  இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த் தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் இசைக்கல்லூரி காருகுறிச்சி அருணாசலத்தின் பேரன் கோரிக்கை

தூத்துக்குடி,டிச. 21 நாதஸ்வர இசைமேதை காரு குறிச்சி அருணாசலம் நினைவினை போற்றும் வகையில் கோவில்பட்டி யில் இசைக்கல்லூரி அமைக்க வேண்டும் என காருகுறிச்சி அரு ணாசலத்தின் பேரன் பெரியநாய கம் கோரிக்கை விடுத்துள்ளார். இசையுலகில் நாதஸ்வரத்தில் புகழ்பெற்று விளங்கியவர் இசை மேதை காருகுறிஞ்சி அருணாசலம். மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், முன்னாள் பிரத மர் நேரு, முன்னாள் முதல்வர் காம ராஜர் ஆகியோர் காருகுறிச்சி அரு ணாசலத்தின் நாதஸ்வர இசைக்கு ரசிகர்களாக இருந்துள்ளனர். அது மட்டுமின்றி முன்னாள் ஜனாதி பதி ராதாகிருஷ்ணன், காருகுறிச்சி அருணாசலத்தை நேரில் அழைத்து பாராட்டியது மட்டுமின்றி, வெள்ளி நாதஸ்வரம் ஒன்றினையும் பரிச ளித்துள்ளார். முன்னாள் பிரதமர் நேருவும் பாராட்டி பரிசளித்துள் ளார். கடந்த 1962 ஆம் வெளிவந்த ‘கொஞ்சும் சலங்கை’ படத்தில் இடம் பெற்ற சிங்கார வேலனே தேவா என்ற பாடலில் இடம் பெற்ற நாதஸ்வர இசை மூலமாக உலக றிய புகழ்பெற்றார். நடிகர் திலகம் சிவாஜிகணேசன், ஜெமினிகணே சன், நடிகை சாவித்ரி, கலைவாணர் என்.எஸ்.கே உள்ளிட்ட பலரிடம் நட்புடன் இருந்தார். காருகுறிச்சி அருணாசலம் பிறந்தது அம்பை அருகேயுள்ள காருகுறிச்சி என்றா லும் தனது வாழ் நாள் இறுதி வரை இருந்தது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தான். அவர் மறைந்த பின்னர் கோவில்பட்டி கடலையூர் சாலையில் அரசு கொடுத்த நிலத்தில் அவரது குடும்பத்தினர் நினைவு மண்டபம் எழுப்பியுள்ளனர். இந்நிலையில் காருகுறிச்சி அருணாசலத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சமீபத்தில் சுமார் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அந்த நினைவு மண்ட பம் புதுப்பிக்கப்பட்டது. அதன் திறப்பு விழா திங்களன்று நடை பெற்றது. தொடர்ந்து அவர் வாசித்த நாதஸ்வரம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் வழங்கி வெள்ளி நாதஸ்வரத்திற் கும் மரியாதை செய்யப்பட்டது. இதையடுத்து நாதஸ்வர இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் காருகுறிச்சி அருணாசலத்தின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இதையடுத்து காருகுறிச்சி அருணாசலத்தின் பேரன் பெரிய நாயகம் செய்தியாளர்களிடம் பேசு கையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இசை மேதை காரு குறிச்சி அருணாசலத்திற்கு தமிழக அரசு உரிய அங்கீகாரம் வழங்கு வது மட்டுமின்றி, கோவில்பட்டியில் அவரது பெயரில் இசைக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இங்கு இசைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்பது தனது தாத்தாவின் ஆசை என்றார்.

 

;