திருச்சிராப்பள்ளி,ஜன. 3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட 23வது மாநாடு செந் தொண்டர் பேரணியுடன் தொடங்கி மணப்பாறையில் தோழர்.கே.வரதராசன் நினைவரங்கத்தில் ஜனவரி 2,3 -இல் நடைபெற்றது. மாநாட்டை மாநில செயற் குழு உறுப்பினர் பெ.சண் முகம் தொடங்கி வைத்து பேசினார். தீர்மானங்கள் மாநாட்டில், திருச்சி மாவட் டத்தில் விவசாயம் சார்ந்த தொழில் வளர்ச்சியை உரு வாக்கி வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும். இராணுவத்திற்கு தேவை யான தளவாடங்களை உற் பத்தி செய்யும் ஒன்றிய அரசின் 41 தொழிற்சாலை களை 7 பொதுத்துறையாக மாற்றியுள்ளதை திரும்பப் பெற வேண்டும்.
தனியா ருக்கு ஆயுதம் தயாரிக்க அனுமதி வழங்கியுள்ளதை ரத்து செய்ய வேண்டும். பிஎச் இஎல் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு ஆர்டர் பெற்றுத் தர வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ‘காவிரிப் படுகை விவ சாய தொழிலாளர்கள் வீர காவியம்’ காணொலியை மாநில செயற்குழு உறுப்பி னர் பெ.சண்முகம் வெளியிட் டார். புதிய மாவட்டக்குழு மாநாட்டில் புறநகர் மாவட் டச் செயலாளராக எம்.ஜெய சீலன் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப் பினர்களாக எஸ்.சந்திரன், கே.சிவராஜன், வி.சிதம்பரம், அ.பழநிசாமி, பி.ராமநாதன், ஆர்.நடராஜன், ஜெ.சுப்ர மணியன், ஏ. மல்லிகா, டி.பி. நல்லுசாமி, எம்.பன்னீர்செல் வம் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். இவர்களை உள்ளட க்கிய 34 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு செய் யப்பட்டது. மாநில செயற் குழு உறுப்பினர் ஏ.லாசர் நிறைவுரையாற்றினார்.