திண்டுக்கல், மார்ச் 7- திண்டுக்கல் இந்திய மருத்துவக் கழ கத்தில் ஞாயிறன்று ஐ.எம்.ஏ. அலுவல கத்தில் பெண் மருத்துவர்கள் பிரிவு கிளை துவங்கப்பட்டது. கௌரவச் செயலாளர் ஜோசப் கிறிஸ்டோபர் பாபு வரவேற்புரை யாற்றினார். பெண் மருத்துவர் பிரிவு தலை வர் டாக்டர் கே.மகாலட்சுமி துவக்கவுரை யாற்றினார். சட்டமன்ற முன்னாள் உறுப்பி னர் கே.பாலபாரதி தலைமையுரை யாற்றினார். காந்திகிராம பல்கலை., பேராசி ரியர் முனைவர் பாலசுந்தரி வாழ்த்தி பேசி னார். ஐ.எம்.ஏ. பெண் டாக்டர் பிரிவின் தலை வர் டாக்டர் ஜே.அமலாதேவி, உதவி இயக்கு நர் (குடும்பநலம்) டாக்டர் பூங்கோதை உள் ளிட்டோர் பங்கேற்று பேசினர். திண்டுக்கல் பான்செக்கர்ஸ் கல்லூரி உதவி பேராசி ரியை வெண்ணிலா எழுச்சி பாடல்கள் பாடி னார். சிறுவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றன. விழாவில் கே.பாலபாரதி பேசியதா வது: ‘‘நாட்டு மக்கள் ஆரோக்கியமான வர்களாக இருக்கிறார்கள் என்றால் அந்த நாட்டின் அரசு நல்ல அரசாக உள்ளது என்று அர்த்தம். கொரோனா பாதிப்பு காரணமாக உலக நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அன்றைக்கு நம் கண் முன் நின்ற கொரோனா தடுப்பு கடவுளாக இருந்து மக்களை காத்தவர்கள் மருத்துவர்கள். பெண் மருத்துவர்கள் ஒரு சங்கமாக திரள்வது அபூர்வம். பெண் மருத்துவர்கள் குடும்பத்தையும், ஆண் மருத்துவர்களின் பணியையும் சேர்த்து கவனிக்கிறார்கள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப் பட்டு தேர்தலில் போட்டியிட்டு மேயர் களாக, துணை மேயர்களாக, நகராட்சித் தலைவர்களாக, பேரூராட்சித் தலைவர் களாக அரசியலில் மிளிருகிறார்கள். நாடாளுமன்றத்தில் கூட பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க மறுக்கும் சூழலில் தமிழகத்தில் பெண்களுக்கு 50 சத வீத ஒதுக்கிய தமிழக அரசை நாம் அனை வரும் பாராட்ட வேண்டும். பெண் மருத்துவர்கள் ஒன்றாகத் திரண்டு உலக மகளிர் தினம் கொண்டாடுவதை நினைக்கும் போது பெருமையாக உள் ளது என்றார்.