districts

img

நாகர்கோவில் குளத்தில் மூழ்கி கேரள வாலிபர் உயிரிழப்பு

நாகர்கோவில், மே 16- நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ளது சுப்பையார் குளம். பாழடைந்து காணப்பட்ட இந்த குளம் தற்போது தூர்வாரப்பட்டு தூய்மைப்படுத்தப் பட்டுள்ளது. மழை பெய்து தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்த நிலையில் மே 15 புதனன்று இரவு குளத்தின் படித்துறையில் கேரள வாலிபர் மது போதையுடன் படுத்து கிடந்துள்ளார். வியாழனன்று காலை அவர் படுத்திருந்த இடத்தில் அவரது செல்போன் மற்றும் உடமைகள் மட்டும் இருந்தன. இதனை அங்கு குளிக்க சென்ற மக்கள் பார்த்து சந்தேகம் அடைந்து உடனடி யாக நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதைத் தொடர்ந்து தீயணைப்பு  படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லைஃப் ஜாக்கெட் உதவியுடன் குளத்தில் குதித்து வாலிபரை தேடினர். அப்போது அவர் நீரில் மூழ்கி பலியானது தெரிய வந்தது.  உடலை மீட்டனர். வடசேரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சடலத்தை கூராய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். வாலிபர் படுத்திருந்த இடத்தில் அவரது ஓட்டுனர் உரிமம் இருந்தது. அதன் மூலம் உயிரிழந்தவர் கேரள மாநிலம் செம்பூர் பகுதி ஒற்றசேகரமங்கலம் என்ற இடத்தைச் சேர்ந்த அலக்ஸ் ராஜ் என்பது தெரியவந்தது.