districts

img

திண்டுக்கல் சுரபி கல்லூரி தாளாளர் மீது போக்சோ வழக்கு முதலமைச்சர் தலையிட்டும் நடவடிக்கை எடுக்காத போலீஸ் எஸ்.பி.

திண்டுக்கல், டிச.12- திண்டுக்கல்லில் தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாளாளர் ஜோதி முருகன் மீதான வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்த தமிழக அரசு முன் வர வேண்டும். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டவர்கள் மீது போடப் பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி சனிக்கிழமையன்று திண்டுக்கல் மணிக்கூண்டு முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி பேசுகையில், போக்சோ குற்றவாளி ஜோதிமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன் றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறை யீடு செய்ய வேண்டும், வழக்கை சிபி சிஐடி விசாரணை நடத்துவது தேவை என்று கருதுகிறோம். சுரபி நர்சிங் கல்லூரி மாணவிகள் போராடும் போது பாதிக்கப்பட்ட மாணவியிடம் முதல் வர் மு.க.ஸ்டாலின் அலைபேசியில் பேசுகிறார். உறுதியான நடவடிக்கை எடுப்போம்; தைரியமாக இருங்கள் என்று ஆறுதல் சொல்கிறார். முதல்வர் பேசியது எங்களுக்கு ஞாபகம் இருக்கி றது. ஆனால் அவரது கட்டுப்பாட்டில் உள்ள இந்த மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு நினைவிருக்கிறதா? திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமி கள், பெண்கள் மீதான வன்கொடுமை களை விசாரிக்க எதற்கு ஒரு அதிகாரி யை ஒதுக்கியிருக்கிறீர்கள்? மாணவி களோடு, பெண் குழந்தைகளோடு இது தொடர்பாக பெண் அதிகாரி தானே பேச முடியும். இதெல்லாம் நடக்க வில்லை. முதல்வர் ஸ்டாலின் பேசி னார் என்பதை கூட கவனத்தில் எடுத் துக்கொள்ளாமல் வழக்கில் உறுதித் தன்மை காட்டாமல் யார் நழுவவிட் டார்கள்? காவல்துறையினர் கடுமை யான பிரிவுகளில் வழக்கு போட வேண்டியது தானே. 

போலீசார் மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்திருக்க வேண்டாமா? முதல்வர் தலையிட்ட பிரச்சனையில் காவல்துறை அதிகாரி களின் நடவடிக்கையில் வித்தியாசம் உள்ளது.  முதலமைச்சர் தலையிட்ட பிரச்சனையில் எவ்வளவு கவனமாக செயல்பட வேண்டும் என்று மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஏன் சிந்திக்கவில்லை என்பதை பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

11 நாளில் ஜாமீன்

இந்தியாவிலேயே போக்சோ குற்றவாளிக்கு 11 நாளில் ஜாமீன் வழங்கிய ஒரு நீதிமன்றம் இருக்கி றது என்றால் அது திண்டுக்கல் நீதி மன்றம் தான். நீதிமன்றம் என்பது மக்கள் நீதி மன்றம் தானே. பாதிக்கப்பட்ட மாணவி கள் குறித்து நீதிமன்றம் முன்பாக முறையிடுவதற்கு எந்த ஜனநாயக உரிமையும் கிடையாதா? என்று கே.பாலபாரதி கேள்வி எழுப்பினார்.  ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச்செய லாளர் ஆர்.சச்சிதானந்தம், மாநி லக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச்செயற்குழு உறுப்பினர் ஜி.ராணி, நகரச் செயலாளர் அரபு முகமது, ஒன்றியச் செயலாளர் சரத்குமார் உள்ளிட்ட பலர் பேசி னர். மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு, இடைக்கமிட்டி செயலாளர்கள், உறுப்பினர்கள், கிளைச் செயலாளர் கள் முன்னணி ஊழியர்கள் பங்கேற்ற னர்.
 

 

 

;