தேனி, ஜூலை 25- ஆதிதிராவிடர் வகுப்பினை சேர்ந்தவர்களுக்கு தாட்கோ மூலம் ஆடு வளர்ப்பு கடன் பெற அரசு கால்நடை மருத்துவர் கையெழுத்துடன் தேனி ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் திட்ட அறிக்கை படிவம் ரூ 800-க்கு விற் பனை செய்யப்பட்டது. தேனி மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் 20க்கும் மேற் பட்ட பெண்கள், ஒருவரிடம் விண் ணப்ப படிவங்கள் பெற்றுக் கொண்டிருந்தனர்.அப்போது செய்தியாளர்கள் விசாரித்த போது, ஆடு வளர்ப்பு கடன் பெறு வதற்காக மருத்துவ சான்றிதழ் மற்றும் திட்ட அறிக்கை பெற்றுக் கொண்டிருப்பதாக பெண்கள் தெரிவித்தனர். திட்ட அறிக்கை மற்றும் மருத்துவ சான்றிதழ்களில் எந்த ஒரு பயனாளியின் பெயரும், மற்ற எந்த விவரங்களும் குறிப்பிடாமல் அன்பழகன் என்ற கால்நடை மருத்துவரின் கையொப்பம் மற்றும் அவரது அலுவலக முத் திரை வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து சான்றிதழ்களை விற்பனை செய்து கொண்டிருந்த இடைத்தரகர் பாண்டி என்பவரி டம் கேட்டபோது,அவர் இது குறித்து பதில் அளிக்க மறுத்து விட்டார். உடனடியாக அங்கி ருந்த 500க்கும் மேற்பட்ட திட்ட அறிக்கை மற்றும் மருத்துவ சான்றிதழ் அடங்கிய படிவங் களை கைப்பற்றிய செய்தியா ளர்கள், உடனடியாக தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனாவிடம் ஒப்படைத்தனர். அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என தெரிவித்தார். தேனி மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து ஆவணங்களும் கொடுக்கப்பட்ட நிலையில், உட னடியாக அவர் உரிய விசாரணை நடத்தி தாட்கோ மேலாளர், கால் நடை மருத்துவர் அன்பழகன், மற்றும் இடைத்தரகர் பாண்டி உட்பட அனைவரும் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.