districts

img

நகைக்கு கூலி, சேதாரம் இல்லை என பொய் வாக்குறுதி மக்களை ஏமாற்றும் கார்ப்பரேட்டுகளை கட்டுப்படுத்துக!

மதுரை, செப்.6- நகைக்கு கூலி, சேதாரம் இல்லை என பொய் வாக்கு றுதி கொடுத்து மக்களை  ஏமாற்றும் கார்ப்பரேட்டு களை அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்று சிஐடியு மதுரை மாநகர் மாவட்ட நகைத்  தொழிலாளர்கள் சங்க ஆண்டுப் பேரவை வலியு றுத்தியுள்ளது.  மதுரை மாநகர் மாவட்ட நகைத்தொழிலாளர்கள் சங்  கம் (சிஐடியு) 12 ஆம் ஆண்டுப்  பேரவை தோழர்கள் எஸ். முருகன் - ஏ. மாரி நினைவ ரங்கில் செவ்வாயன்று நடை பெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் கே. வேல்பாண்டி தலைமை வகித்தார். சிஐ டியு கொடியினை ஏ.கபீர் ஏற்றிவைத்தார், ஜெ. வெங்க டேஷ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்,

சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் இரா. லெனின் துவக்கி வைத்து  பேசினார், பொதுச்செயலா ளர் ஏ. அழகேசன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார், சிஐடியு மாவட்ட தலைவர்  மா.கணேசன், மாவட்டக் குழு உறுப்பினர் இரா.வாசு தேவன், மதுரை மாநக ராட்சி துணை மேயர் டி.  நாகராஜன், சட்ட ஆலோச கர் எம். ராமசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. தெய்வராஜ் நிறைவுரை யாற்றினார். நிர்வாகக்குழு உறுப்பினர் திருமூர்த்தி நன்றி கூறினார்.  ஒன்றிய அரசு நகைத் தொழிலாளர்களுக்கு பிஎப் , இஎஸ்ஐ வழங்க வேண்டும்.தங்கநகைகளுக்கு கூலி இல்லை, சேதாரம் இல்லை என பொய் வாக்குறுதி  கொடுத்து மக்களை ஏமாற் றம் கார்ப்பரேட்டுகளை கட்  டுப்படுத்த வேண்டும். குறைந்த  பட்ச கூலியை உறுதிப்படுத்த வேண்டும். நகைக்கான விற்  பனை வரியில் ஒரு பகுதியை நகைத் தொழிலாளர் நலன் களுக்கு ஒதுக்கிடு செய்ய வேண்டும். திருமாங்கல்யம் போன்ற நகைகளை கார்ப்ப ரேட்டுகள் விற்பதை தடை செய்திட வேண்டும். பாரம்  பரிய பொற்கொல்லர் களுக்கு மட்டும் திருமாங்கல் யம் செய்வதற்கும் , விற்  பதற்கும் அனுமதி வழங்க  வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய நிர்  வாகிகள் தேர்வு செய்யப்  பட்டனர். சங்கத்தின் தலை வராக கே.வேல்பாண்டி, பொதுச்செயலாளராக ஏ. அழகேசன், பொருளாளராக ஜெ.வெங்கடேஷ் உள்பட  15 நிர்வாகக்குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்ட னர்.

;