districts

img

மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பாஜக அரசை கண்டித்து தேனியில் ஆர்ப்பாட்டம்

தேனி, ஜூலை 11- மணிப்பூர் மாநிலத்தில் கல வரத்தை கட்டுப்படுத்த தவறிய பாஜக அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு  அமைதியை நிலைநாட்ட வலியு றுத்தி திமுக தோழமைக் கட்சிகளின்  சார்பில் ஜூலை 11 அன்று தேனியில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தேனி பழைய பேருந்து நிலை யத்தில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி யின் தேனி மாவட்ட தலைவர் கூட லூர் எம்.பி.முருகேசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திமுக  தேனி வடக்கு மாவட்டச் செயலாளர்  தங்க.தமிழ்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட  செயலாளர் ஏ.வி.அண்ணாமலை,

சிபிஐ மாவட்டச் செயலாளர் கி.பெரு மாள், மதிமுக தேனி மாவட்ட செயலா ளர் வி.எஸ்.கே .ராமகிருஷ்ணன் விடு தலை சிறுத்தைகள் கட்சி தேனி  மாவட்ட செயலாளர் ப.நாகரத்தினம் ,மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அப்துல்லா பத்ரி ஆகி யோர் பேசினர். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பி னர் கே.எஸ்.சரவணக்குமார் ,திமுக  நகர் செயலாளர் என்.சி.நாராயண பாண்டி, காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ஆர்.சன் னாசி, மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மூத்த தலைவர் கே.ராஜப் பன், தேனி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், சி.முருகன், சி.முனீஸ்வரன் ,தேனி தாலுகா செயலாளர் இ.தர்மர் ,விடு தலை சிறுத்தைகள் கட்சி நாடாளு மன்ற தொகுதி செயலாளர் தமிழ்  வாணன் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பாஜக படுதோல்வியடையும்: தங்க.தமிழ்ச்செல்வன் பேச்சு ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக  வடக்கு மாவட்ட செயலாளர் தங்க. தமிழ்செல்வன், 60 நாட்களாக மணிப்பூரில் கலவரம் நடந்து வரும்  நிலையில் அப்பகுதிக்கு செல்ல பிர தமருக்கு நேரமில்லை. இந்த நேரத் தில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆர்எஸ்எஸ் அஜெண்டாவை பாஜக நிறைவேற்றி  வருகிறது. முதலில் காஷ்மீர் மாநி லத்தில் 370 வது பிரிவை நீக்கினார் கள். பின்னர் ராமர் கோவிலை கட்டி முடித்தனர் .தற்போது பொது சிவில் சட்டத்தை கொண்டு வர அவசரம் காட்டுகிறார்கள். பாஜக அரசு இன்னொரு முறை வந்தால் நாடு தாங்காது. பாஜக அரசை வீழ்த்த 17 கட்சிகள் ஒருங்கிணைத்து வியூகம்  வகுத்து வருகின்றன. வரும் நாடாளு மன்ற தேர்தலில் படுதோல்வியை பாஜக சந்திக்கும் என்றார்.