மதுரை, ஜூலை. 7- அகில இந்திய இன்சூர ன்ஸ் பென்சனர்கள் சங்கத் தின் (ஏஐஐபிஏ) ஹைதரா பாத் மத்தியக் குழு “அனை வருக்கும் பென்சன்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் தேர்ந்தெ டுக்கப்பட்ட மையங்களில் கருத்தரங்கள் நடத்துவ தென முடிவு செய்தது. அதன்படி முதல் கருத்த ரங்கமாக மதுரைக் கோட்ட எல்ஐசி பென்சனர்கள் சங்கமும், மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் பென் சனர்கள் சங்கமும் இணை ந்து புதனன்று இக்கருத்த ரங்கை நடத்தின. எல்ஐசி பென்சனர்கள் சங்க செயலா ளர் சி.சந்திரசேகரன் தலை மை வகித்தர், பொது இன்சூ ரன்ஸ் பென்ஷனர் சங்க மதுரை மண்டலம்,தலைவர் ஆர். ராம நாராயணன் வர வேற்றார். சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.லெனின் சிறப்புரையாற்றினர், காப்பீ ட்டுக் கழக ஊழியர் சங்க மதுரைக் கோட்ட இணைச் செயலாளர் எஸ்.தணிகை ராஜ்,பொதுக் காப்பீட்டு ஊழியர் சங்கம் துணைத் தலைவர் புஷ்பராஜன் உள்ளிட்ட தோழமை சங்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசினார். காப்பீட்டு கழக பென்ஷனர் ஊழியர் செயற்குழு என். பகத்சிங் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.