districts

நெல்லை, தென்காசியில் தக்காளி விலை ரூ.100-ஐ தாண்டியது

திருநெல்வேலி, டிச.4- நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் தக்காளி விலை 1 கிலோ ரூ.140 வரை அதிகரித்து காணப்பட்டது. தொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலை பல மடங்கு உயர்ந்தது. இத னால், தமிழக அரசு வட மாநிலங்களில் இருந்து தக்காளியை கூடுதலாக கொள்முதல் செய்யவும், பசுமை காய்கறி கடை உள்பட பல்வேறு அரசு துறை அங்காடிகளிலும் தக்காளி விற்பனை செய்ய உத்தர விட்டது. இதனால், தக்காளி விலை கிலோ ரூ.60 வரை குறைந்தது.

 இந்த நிலையில் சனிக் கிழமையன்று மீண்டும் நெல் லையில் தக்காளி விலை அதிகரித்தது. நெல்லை உழ வர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கும், ஒரு கிலோ வெள்ளை கத்தரிக் காய் ரூ.120-க்கும், கொத்தவ ரைக்காய் ரூ.65-க்கும் விற் பனையானது. முருங்கைக் காய் ரூ.110-க்கு விற்பனை யானது. பாளை மார்க்கெட்டிலும் ஒரு கிலோ தக்காளி ரூ.110 வரை விற்பனை செய்யப் பட்டது. குடியிருப்பு பகுதிக ளில் உள்ள சில்லறை கடைக ளில் ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்பனை செய் யப்பட்டது. சில இடங்களில் பழைய தக்காளி பழம் இருந்தால் அதை ரூ.80 வரை குறைத்து விற்பனை செய்தார்கள்.  நயினார்குளம் மொத்த மார்க்கெட்டில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.95 முதல் ரூ.100 வரை விற் பனை செய்யப்பட்டது. வெள்ளை கத்தரிக்காய் விலை ஒரு கிலோ ரூ.120 வரை விற்பனை செய்யப் பட்டது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் மொத்த மார்க்கெட்டில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது. வெள்ளை கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.85 முதல் 120 வரை விற்பனை செய்யப்பட்டது. மிகவும் விலை குறைவாக விற்கப்படும் சீனி அவரைக் காய் ஒரு கிலோ ரூ.62-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெண்டைக்காய் விலையும் கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டது.  ஆலங்குளம் மார்க் கெட்டில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது. தென்காசி மாவட்டங்களில் உள்ள மற்ற நகர் பகுதிக ளில் தக்காளி விலை ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. வெள்ளை கத்தரிக்காய் விலை ரூ.150 வரை விற்பனை செய்யப் பட்டது.

;