districts

img

மதுரையில் பாதாளச்சாக்கடைக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலி

மதுரை, அக்.21- மதுரை மாநகராட்சி புதிதாக விரிவாக்கம் செய்யப் பட்ட 28 வார்டுகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. இதனொரு பகுதியாக சாந்திநகர் முதல் கூடல் நகர் வரை பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாதாளச் சாக்கடைக்காக தோண்டிய பள்ளத்தில் சிக்கி 54 வயது மதிக்கத்தக்கவர் உயிரி ழந்தார். மதுரை கூடல்நகர் அருகே உள்ள சொக்கலிங்க நகர் முதலாவது தெருவைச் சேர்ந்தவர் நாராயணன்/ இவரது மகன் வேலுகோபால் (54). இவர் வியா ழக்கிழமை இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பாதாளச்சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறிவிழுந்தார். உடனடியாக அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோ தித்த மருத்துவர்கள், வேலுகோபால் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து குடியிருப்புவாசிகள் வேலுகோபால் உயிரிழப்பிற்கு மோசமான சாலைகளும், சரிவர மூடப் படாத பாதாளச்சாக்கடை குழிகளும் தான் எனக்கூறி மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து  1 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் அமுதா வெள்ளியன்று  நடை பெற்ற மாமன்ற கூட்டத்தில்  பணி நடைபெறும் இடத்திற்கு அதிகாரிகள் சரியாக வருவதில்லை. ஒப்பந்ததாரர்கள் மட்டுமே வந்து பணியினை செய்து வருகிறார்கள். இத னால் தெருவில் வாகனங்கள் சொல்ல முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக உள்ளது. இறந்த நபரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெற்று மாநகராட்சி நிர்வாகம் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கையினை முன்வைத்து ஆணையாளர், மேயர் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து அன்று மாலை ஒப்பந்ததாரர் உயிரிழந்தவரின் இல்லத்திற்கு நேரில் சென்று மாமன்ற உறுப்பினர் மற்றும் குடியிருப்போர் நல சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் அந்த குடும்பத்திற்கு இரண்டரை லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கினார்.