districts

img

சுகாதார செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்

மதுரை, ஆக.3-  சுகாதார செவிலியர்கள் யு வின் (U win) செயலியில்  தடுப்பூசியை பதிவு செய்ய  வேண்டாம். பல்வேறு செயலி செயல்பாடுகளால் மிகுந்த மன உளைச்சலுக் கும் பணித்திணிப்பிற்கும் ஆளாக்கிய அரசையும் பொதுசுகாதாரத் துறை யையும் கண்டித்து நகர சுகா தார செவிலியர்கள் மற்றும்  பகுதி சுகாதார செவிலியர்  கள் சங்கம் சார்பில் வியா ழனன்று கருப்புப்பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடு பட்டனர்.  மதுரையில் முனிச் சாலை, நரிமேடு பகுதிகளில் சுகாதார செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டேட்டா எண்ட்ரி ஆப ரேட்டர் பணிநியமனம் செய்த  பிறகே யு வின் ( U Win) செயலி பதிவு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மாநிலத்தலைவர் எம். பஞ்சவர்ணம் கூறினார்.