இன்றைய நிகழ்ச்சி
மதுரை நம்பி எழுதிய ‘சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்’ புத்தக வெளி யீட்டு விழா . மாலை 5 மணிக்கு ஏ. ஏ. ரோடு ஞானஒளிவுபுரம் லயோலா தொழில்நுட்பக் கல்லூரி வளாக அரங்கம். பங்கேற்பு ஓவியக் கவிஞர் ஸ்ரீரசா, எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், கவிஞர் கே.பாலபாரதி, கவிஞர் மதுக் கூர் இராமலிங்கம், அ.ந.சாந்தாராம், பேராசிரியர் ஆர்.பிரபாகர்.
மதுரை மாநகராட்சியில் 81 வார்டுகளை கைப்பற்றியது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி
மதுரை, பிப்.23- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 வார்டுகளைக் கொண்ட மதுரை மாநகராட்சியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 81 வார்டுகளை கைப்பற்றியது. இதில் திமுக 67 வார்டுகளையும் காங்கிரஸ் 5 வார்டுகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 வார்டுகளையும் மதிமுக 3 வார்டுகளையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு வார்டு, சுயேட்சை வேட்பாளர் ஒருவர் என மொத்தம் 81 வார்டுகளை கைப்பற்றி யது. அதிமுக 15 வார்டுகள், பாஜக ஒரு வார்டையும் பெற்றன. சுயேட்சைகள் 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
பைக்கிலிருந்து தவறி விழுந்து அரசு பேருந்து நடத்துநர் பலி
திருவில்லிபுத்தூர், பிப்.23- திருவில்லிபுத்தூர் ராஜபாளையம் ரோடு வன்னியம்பட்டி விலக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் கோவிந்தராஜ் (வயது 46) .அரசு போக்கு வரத்து கழக நடத்துநராக பணியாற்றி வந்தார். இவருக்கு லதா என்ற மனைவி யும் கார்த்திக் பிரகாஷ் என்ற மகனும் ஜீவிதா என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று கோவிந்தராஜ் தனது மோட்டார் சைக்கிளில் ராஜபாளையம் மதுரை சாலையில் வந்து கொண்டிருந்த போது மூதாட்டி ஒருவர் திடீரென சாலையை கடந்து உள்ளார் . அவர் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை கோவிந்தராஜ் திருப்பும் போது தவறி கீழே விழுந்து தலையில் பலத்த அடிபட்டது. ஆபத்தான நிலை யில் திருவில்லிபுத்தூர் அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு,சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். அவரது தம்பி மகா லிங்கம் அளித்த புகாரின் பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் செலுத்தாத மாணவர்களை வெயிலில் நிற்க வைத்த தனியார் பள்ளி
முசிறி, பிப்.23 - திருச்சி மாவட்டம் முசிறி துறையூர் சாலையில் அமைந்துள்ள அமலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாதிரி தேர்வு எழுத சென்ற, பணம் செலுத்தாத 11 ஆம் வகுப்பு மாணவ- மாணவி யர்களை பள்ளி நிர்வாகத்தினர் தேர்வு அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் கடும் வெயிலில் நிற்க வைத்து பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் மூலம் பெற்றோருக்கு தகவல் தெரிய, சுமார் 30-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டு கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த செய்தியாளர் ஒருவர் அங்கு செய்தி சேகரிக்க சென்ற போது, செய்தியா ளரை ஆசிரியர் ஒருவர் தாக்கும் நோக்கில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இத னால் பொதுமக்கள் வாயிலாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முசிறி காவல் உதவி ஆய்வாளர் முத்தையன் தலைமையிலான காவ லர்கள், பள்ளி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்திய பின், மாணவ-மாண விகள் தேர்வு நிலையத்திற்குள் அனு மதிக்கப்பட்டுள்ளனர். அமலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தொடர்ந்து கடும் சர்ச்சைகளுக்கு உள்ளா வதும், மாவட்ட கல்வி அலுவலர் நட வடிக்கை எடுக்கத் தயங்குவதும் ஏன் என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தோழர் அலமேலம்மாள் படத்திறப்பு
கும்பகோணம், பிப்.23- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய குழு உறுப்பினர் கோவிந்தராஜ், சிபிஎம் உறுப்பினர் முருகேசன், திமுக கைத்தறி அமைப்பாளர் மகாலிங்கம் ஆகியோரது தாயார் அலமேலம்மாள் இயற்கை எய்தி யதை முன்னிட்டு அம்மையாரின் படத் திறப்பு நிகழ்வு திருவிடைமருதூரில் நடைபெற்றது. படத்திறப்பில் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் சா.ஜீவபாரதி தலைமை வகித்தார். அம்மையாரின் உருவப் படத்தை சிபிஎம் மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன் திறந்து வைத்தார்.
பட்டாசு ஆலையில் விபத்து: தொழிலாளி ஒருவர் காயம்
சிவகாசி, பிப்.23- சிவகாசி அருகே ஜமீன் சல்வார்பட்டி யில் தனியார் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் காயமடைந்தார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளது ஜமீன் சல்வார்பட்டி. இங்கு, ரவீந்திரன் என்பவருக்கு சொந்த மான ஸ்ரீகிருஷ்ணா பட்டாசு ஆலை உள் ளது. இங்கு கேப் வெடிகள் தயாரிக்கப் பட்டு வருகிறது. ஆலையில் வழக்கம் போல தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது ரசாயன கலவையை கதிர்வேல் தயார் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில், திடீ ரென உராய்வு ஏற்பட்டதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில், கதிர்வேல் காயமடைந்தார். இதையடுத்து, சக தொழிலாளர்கள் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சிவ காசி கிழக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
தேசிய ஜூடோ போட்டி: மாணவர்களுக்கு பாராட்டு
தூத்துக்குடி, பிப். 23 தேசிய அளவிலான ஜூடோ விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் வென்ற தூத்துக்குடி மாவட்ட மாணவர்களுக்கு எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார். தேசிய அளவிலான ஜூடோ விளையாட்டு போட்டி கடந்த கடந்த 14 முதல் 20ஆம் தேதி வரை இமாச்சலபிரதேச த்தில் உள்ள சோலார் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு சார்பில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கலந்துகொண்ட 7 மாணவர்களில் எமில் சால மோன் மற்றும் அஜித் குமார் ஆகியோர் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கமும் மற்ற மாணவர்கள் அடுத்து நடைபெற உள்ள சர்வதேச அளவிலான போட்டியான அக்ஷய்குமார் டிராபி போட்டிக்கு தகுதியும் பெற்றுள்ளனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை புதனன்று மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார். மாவட்ட ஜூடோ சங்க செயலாளர் ஸ்டீபன், பொருளாளர் சுப்புராஜ், சேர்மன் இசக்கி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
லேபிள் விவரம் இன்றி பொட்டலம் போடப்பட்ட 20 டன் உப்பு பறிமுதல்
தூத்துக்குடி, பிப். 23 தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன், விளாத்திக்குளம் பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் ஆகியோர் குளத்தூர் பகுதியில் உள்ள உப்பு பொட்டலமிடும் நிறுவனத்தை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு 50 கிலோ மூட்டைகளாக 20 டன் உப்பு பொட்டலங்கள் இருந்தன. அந்த உப்பு பொட்டலத்தை ஆய்வு செய்த போது, அதில் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்துக்கு உட்பட்டு லேபிள் விவரங்கள் இல்லாதது கண்டறி யப்பட்டது. எனவே, அங்கிருந்த 20 டன் உப்பை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த உப்பில் இருந்து உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பி, அதன் அறிக்கையின் அடிப்படையில் தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளனர். மேலும் உணவு பாதுகாப்பு உரிமம் இன்றியும், உரிய லேபிள் விவரங்கள் இன்றியும் உணவுப் பொருள் உற்பத்தி செய்வது, பொட்டலமிடுவது, இருப்பு வைப்பது, வாகனங்களில் போக்குவரத்து செய்வது, சில்லறை விற்பனை செய்வது ஆகி யவை தண்டனைக்கு உரியதாகும். எனவே, உணவு சம்பந்தப்பட்ட வணிகர்கள் அனைவரும் உடனடி யாக www.foscos.fssai.gov.in என்ற இணையத் தளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமம் எடுக்கவும், உணவுப்பொருட்களை உரிய லேபிள் விவரங்களுடன் பொட்டலமிடவும் வேண்டும்.தவ றினால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
தூத்துக்குடி, பிப். 23 எட்டையபுரம் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகேயுள்ள கீழ இறால் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மாரியம்மாள். இந்த தம்தியரின் மகள் தங்க முத்துமாரி (14). அங்குள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். முருகன் தினமும் மதுகுடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம். தந்தையின் மது பழக்கத்தால் தங்க முத்துமாரி மன வேதனையில் இருந்துள் ளார். இந்நிலையில் செவ்வாயன்று அவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எட்டையபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகம்மது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் உடல் பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டிபட்டியில் போலி பத்திரம் மூலம் நிலம் விற்பனை பத்திரப் பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்ட உரிமையாளர்கள்
தேனி, பிப்.23- தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் போலி பத்திரம் மூலம் நிலம் விற்பனை செய்த விவகாரத்தில் அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி பத்திரப் பதிவு அலுவலகத்தை நில உரிமையாளர் கள் முற்றுகையிட்டனர். ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜ கோபாலன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வாசு தேவன், ராமக்காள், ரமேஷ், திருவேங்கட சாமி உள்ளிட்ட 11 பேர்களுக்கு சொந்த மான ஒரே குடும்ப வகையறாவைச் சேர்ந்த சுமார் 20 ஏக்கர் நிலம் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு தனிநபர்களுக்கு முறையாக பத்திரப்பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. வாங்கிய இடத்திற்கு பட்டா உள்ளிட்ட ஆவணங்களையும் நிலத்தை வாங்கிய உரிமையாளர்கள் பெற்றுள்ள னர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் மதுரையைச் சேர்ந்த தமிழ்செல்வி, தன லட்சுமி, கீதா, பாலசுப்ரமணியம், அலமேலு, ஜானகி, முருகேசன் ஆகிய 7 தனிநபர்கள் போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக ஒரு பத்திரத்தை தயாரித்ததாக தெரிகிறது. போலியாக தயாரித்த அந்தப் பத்திரத்தின் மூலம் சில தனி நபர்களுக்கு நிலங்களை விற்பனை செய்துள்ளனர். மோசடி கும்பலி டம் நிலத்தை வாங்கிய நில உரிமையா ளர்கள் நிலத்தை அளவீடு செய்து பார்க்க நிலத்திற்கு சென்ற போது தான் உண்மை யான நில உரிமையாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்த விசாரித்த போது தான் அவர்களது நிலத்தை மதுரையைச் சேர்ந்த மோசடி கும்பல் போலி பத்திரம் தயாரித்து போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து புத னன்று ஆண்டிபட்டி பத்திரப்பதிவு அலு வலகத்திற்கு வந்த பாதிக்கப்பட்ட உண்மை யான நில உரிமையாளர்கள் ஆண்டிபட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்பு பத்திரப்பதிவு அலுவல கத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற் பட்டது. மேலும் போலி பத்திரம் மூலம் விற்பனை செய்யப்பட்ட தங்கள் நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும், மோசடி கும் பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போலி பத்திரப் பதிவுக்கு உடந்தை யாக இருந்த அதிகாரிகள் மற்றும் பணி யாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு பத்திரப் பதிவுத்துறை, தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் செய்ய உள்ளதாக நில உரிமை யாளர்கள் தெரிவித்துள்ளனர்.