districts

மதுரை முக்கிய செய்திகள்

பலத்தக்காற்று வீசியதில் இரும்புத்தகரம் வெட்டி மாற்றுத்திறனாளி பலி

கடமலைக்குண்டு, செப்.13- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கோம்மைபத் கோம்பைதொழு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 56). மாற்றுத்திறனாளி. இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்புள்ள திண்ணையில் அமர்ந்து உறவினருடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது காற்று பலமாக வீசியது. கணேசன் என்பவரது வீட்டு மேல் போடப்பட்டு இருந்த இரும்பு தகரம் காற்றின் வேகத்துக்கு அடித்துச் செல்லப்பட்டு முருகன் தலை மீது வெட்டியது. இதில் பலத்த காய மடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனி ன்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசியில்  நூல் வெளியீட்டு விழா

சிவகாசி, செப்.13- சிவகாசியில் “வித்தி வான் நோக்கும் வியன் புலம்“நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பி.எம்.பெரியநாயகம் தலைமை யேற்றார். என்.ஜெகன் வரவேற்றார். கா.சிவபெருமான், வெள்ளைத்தாய், ஆரிப், மு.முத்துச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலை என்.கிருஷ்ணசாமி வெளியிட வழக்கறிஞர் ஜி.மாரிமுத்து உட்பட பலர்  பெற்றுக் கொண்டனர்.  தமிழக கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் த.அறம், சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.அர்ஜூனன், தமுஎகச மாவட்ட நிர்வாகிகள் இலட்சுமி காந்தன், தேனிவசந்தன், கே.சண்முகம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். நூல்குறித்து எழுத்தாளர்கள் ச.தமிழ்ச்செல்வன், மதுக்கூர் ராமலிங்கம், உதயசங்கர் ஆகியோர் பேசினர். நூல் ஆசிரியர் பெ.ரவீந்திரன் ஏற்புரை வழங்கினார். முடிவில் சந்திரராஜன் நன்றி கூறினார். இதில் ஏராளமா னோர் பங்கேற்றனர்.

பொதுமக்கள்- அதிகாரிகள் கலந்துரையாடல் 

திருவில்லிபுத்தூர். செப். 13- வான்முகில் அமைப்பு சார்பாக வட்டார அளவிலான அரசு அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை அன்று நூர்சாகிபுரம் கிராமத்தில் நடைபெற்றது.  வான்முகில் திட்ட மேலாளர் ச.அருள் தலைமை வகித்தார்.  கிராம வழிகாட்டுனர்  மாரியம்மாள் வர வேற்றார். திருவில்லிபுத்தூர் வட்டார வளர்ச்சி அலு வலர் (திட்டம்) சிவகுமார், பி. இராமச்சந்திராபுரம் கிராம நிர்வாக அலுவலர் சஞ்சீவிராஜ் மற்றும் சாந்தி ஆகி யோர் அரசு நலத்திட்டங்கள் குறித்து கருத்துரை யாற்றினர்.  படிக்காசுவைத்தான்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் வாழ்த்துரை வழங்கினார். கிராம வழி காட்டுனர் மல்லிகா நன்றி கூறினார்.

மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க அமைப்பு தினம் 

மதுரை, செப் 13-  தமிழ்நாடு மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கத் தின் 36-வது அமைப்பு தினம் மதுரை மாவட்டத்தில் மதுரை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கொடியை பொதுச் செயலாளர் ஆ.செல்வம், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன கொடியை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நீதி ராஜா ஏற்றினர். தமிழ்நாடு மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க கொடியை மாவட்ட செயலாளர் பெரோஸ் கான் ஏற்றினார்.

வாழைகளை நாசம் செய்த காட்டுப்பன்றிகள்

திருநெல்வேலி, செப். 13- களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் ஊருக்கு மேற்கே தாதாபறையில் மாவடியை சேர்ந்த விவசாயிகள் முத்துகிருஷ்ணன் (வயது45), இளையபெருமாள் (60), செந்தில்சாமி (40) ஆகியோருக்கு சொந்தமான விளை நிலங்கள் உள்ளன. இதில் வாழை, நெல் பயிர் செய்துள்ளனர்.  இந்நிலையில்  இரவில் விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு பன்றிகள் 50-க்கும் மேற்பட்ட வாழைகளை நாசம் செய்துள்ளன. 

விவசாயத்தொழிலாளர் சங்க ஒன்றிய மாநாடு 

தேனி ,செப்.13- அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கத்தின் ஆண்டிபட்டி ஒன்றிய மாநாடு கன்னியப்பபிள்ளை பட்டியில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு  டி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். அஞ்சலி தீர்மானத்தை எஸ் . மீனாட்சிசுந்தரம் வாசித்தார். பிரதிநிதிகளை வரவேற்று சுப்புராம் பேசினார்.  மாவட்ட தலைவர் எல்.ஆர்.சங்கரசுப்பு மாநாட்டினை தொடக்கி வைத்து பேசினார் .வேலை அறிக்கையை செய லாளர் எஸ்.அய்யர் சமர்ப்பித்தார் ..சிஐடியு தலைவர்.மா.தங்கராஜ்,விவசாயிகள் சங்க செயலாளர் .சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர் .மாவட்ட பொருளாளர் கே.தயாளன் நிறைவுரையாற்றினார்.  மாநாட்டில் ஒன்றிய தலைவராக கே.தயாளன், செயலாளராக எஸ்.அய்யர் ,பொருளாளராக கந்தசாமி,. துணைத் தலைவராக எஸ்.எம் .சாமி ,துணைச் செயலா ளராக ஜெயராஜ்  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் வாலிபர் தற்கொலை

திருநெல்வேலி, செப் .13- வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் பிச்சையா கார்த்திகேயன். இவரது மகன் வேலு (23). இவர் ராணுவத்தில் சேருவதற்காக பயிற்சி எடுத்து வந்தார். சமீபத்தில் நடந்த ராணுவத்திற்கான உடல் தகுதி தேர்வில் அவர் பங்கேற்றார். அதில் தேர்ச்சி பெற்ற வேலு மருத்துவ பரிசோதனை தேர்வில்  தோல்வி அடைந்தார். அதாவது கண் பார்வை திறன் தொடர்பான சோதனை யில் அவருக்கு பார்வை குறைபாடு இருப்பதாக கூறி விட்டனர். இதனால் அவருக்கு ராணுவத்தில் சேர முடியா மல் போய்விட்டது.  இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த வருத்தத்தில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வேலு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக வீரவநல்லூர் காவல்நிலையத்தார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியை வீட்டில் நகைகள் திருட்டு

 தூத்துக்குடி ,  செப். 13 ஓட்டப்பிடாரம் அருகே ஆசிரியை வீட்டில் 21 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள டி. ஐயப்ப புரத்தை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவரது மனைவி செல்வ முருகேஸ்வரி (50), இவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். தனது வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்று விட்டார். மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவில் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 21 பவுன் தங்க நகைகளை திருடு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். இதுகுறித்து செல்வ முருகேஸ்வரி நாரைக் கிணறு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆய்வாளர் கோவிந்தன் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார். அப்பகுதியில் உள்ள  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையர்க ளை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை உலக தமிழ்ச்சங்கத்தில் 16 ஆயிரம் புத்தகங்கள் இருப்பது என்பது மிகக்குறைவானதே

துணை இயக்குநர் ஆஜராகி விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, செப் 13-  மதுரை உலக தமிழ்ச்சங்கத்தில்  16 ஆயிரம் புத்தகங்கள் இருப்பது என்பது மிகக்குறைவானதே என்று தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழ்ச் சங்கத்தின் துணை இயக்குநர் நேரில் ஆஜ ராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தர விட்டுள்ளது. மதுரை மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,”மதுரையில் உலக தமிழ்ச்சங்கம் திறக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகி யும் தமிழ் மொழி வளர்ப்புக்கு தேவை யான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப் படவில்லை. நூலகத்தில் தரமான நூல்கள்  இல்லை. உலக தமிழ்ச்சங்கத்தில் உள்ள நூல கத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள், தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொ டர்புடைய பிற மொழி நூல்களை வைக்கவும், நூலகத்தில் புதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண   பிரசாத் அமர்வு முன்பாக செவ்வாயன்று நடை பெற்றது.  அரசுத்தரப்பில், “16 ஆயிரம் புத்தகங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் கூறுகையில், “ 16 ஆயிரம்   புத்தகங்கள் என்பது மிகக் ்குறைவான அளவு.  தமிழ்ச்சங்கத்தின் துணை இயக்குநர் நேரில் ஆஜராகி, ஒதுக்கப்படும் நிதி, நடத்தப்படும் நிகழ்வுகள்,   புத்தக விபரங்கள் உள்ளிட்டவை குறித்து விளக்க மளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.  வழக்கை செப்டம்பர்   20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

புதிய வகை வைரஸ் தாக்குதலால்  பல ஆயிரம் ஏக்கர் சௌ சௌ பயிர்கள் நாசம்

விவசாயிகள் வேதனை

திண்டுக்கல்,செப்.13- திண்டுக்கல் சிறுமலை யில் தமிழக அரசின் வேளாண் துறை பரிந்துரை த்த சௌ சௌ பயிரில் புதிய வகை வைரஸ் தாக்கு தலால் வேர் முதல் நுனி வரை செடி முழுவதும் கருகி பல ஆயிரம் ஏக்கர் பயிர் நாச மானது..  இதனால் விவசாயி கள்  வேதனையடைந்துள் ளனர்.   தமிழக அரசு வேளாண் மைத்துறை அதிகாரிகள் நல்ல லாபம் தரும் புதிய ரக சௌசௌ என்று வழங்கிய விதையால் விளைந்த கொடி கள் நாசமானது. விவசாயி கள் செய்வதறியாது விழி பிதுங்கிய நிலையில் உள்ளனர்.

 இது தொடர்பாக தென் மலையைச் சேர்ந்த விவசாயி பாஸ்கரன் என்பவர் கூறும் போது, இந்த பகுதியில் சௌ சௌ விவசாயம் செய்து வருகிறோம். முன்பெல்லாம் நாட்டு ரகமான சௌ சௌ விவசாயம் செய்து வந் ்தோம். அந்த சௌசௌவில் முள் இருக்கும். காப்பு ஓரளவு இருக்கும். இரண்டு வருடத்திற்கு தாங்கும். ஒரு முறை நாங்கள் விவ சாயம் செய்தால் போதும். 2 வருடத்திற்கு காய் எடுப் போம். செலவு குறைவு. ஆனால் விளைச்சல் குறை வாக இருந்தது. இப்போது அதிகமான உற்பத்திக்காக தமிழ்நாடு அரசின் வேளாண் மைத் துறை புதிய ரகத்தை அறிமுகம் செய்தார்கள். விளைச்சல் அதிகமாக இருக்கும். காய சைனிங்கா இருக்கும். மார்க்கெட்டில் நல்ல விலை போகும் என் றார்கள். நாங்களும் அதை நம்பி நட்டு பார்த்தோம். முதல் வருடம் தான் நல்ல விளைச்சல் கொடுத்தது இப்ப 8 ஆண்டுகளாக நடவு செய்து வருகிறோம். இதில் எங்களுக்கு நஷ்டம் தான் வருகிறது. அதிகமான காப்பு இல்லை. 3 மாதம் தான் காப்பு இருக்கிறது. பழைய நாட்டு ரகத்தில் 8 மாதம் வரை காப்பு எடுப்போம். அது இல்லாமல் 2 வருடத் திற்கு கொடியை வைத்தி ருப்போம். மராமத்து செலவு குறைவு. இப்ப அறிமுகம் செய்த ரகத்தில் எல்லா வேலையும் செய்ய வேண்டி யுள்ளது. இந்த வருடம் இந்த கொடியில் வைரஸ் தாக்குதல் ஆகி உள்ளது. இதனால் காயின் சைனிங் மாறிவிடுகிறது. இதனால் 3 மாதத்தில் வயதானது மாதிரி ஆகிவிடுகிறது. சீக்கி ரத்தில் நோய் வாய்ப்பட்டு அந்த கொடி இறந்துவிடு கிறது. மேலிருந்து கீழ் வரை சருகாகி விளைச்சல் இல்லா மல் போகிறது. அதனால் வருடத்தில் 2 முறை சாகுபடி செய்ய வேண்டியுள்ளது. இந்த நோய் தாக்குதலில் இருந்து காக்க வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். சௌசௌ விவ சாயத்தை மறு சீரமைப்பு செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று பாஸ்கர் தெரிவித்தார்.

 


 

;