districts

மதுரை முக்கிய செய்திகள்

மதுரையில் குட்கா விற்ற  மளிகை கடைக்கு சீல்வைப்பு 

மதுரை, அக்.20-  மதுரை மதிச்சியம் பகுதியில் குட்கா விற்பனை செய்த  மளிகை கடைக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.  மதுரை நகரில் புகையிலை, கஞ்சா விற்பனை செய்  வதை தடுப்பதற்கு தனிப்படை அமைத்து முக்கிய பகுதி களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். புகை யிலை பொருட்கள், குட்கா விற்பனை செய்யும் கடைகளை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை, மதிச்சியம் ராமராயர் மண்ட பம் பகுதியில் தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா விற்பனை நடந்து வருவதாக மதிச்சியம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத னைத்தொடர்ந்து மதிச்சியம் காவல் ஆய்வாளர் சேது மணி மாதவன் தலைமையில் காவல்துறையினர் சோதனை யிட்டனர். இதில் மளிகைக் கடை ஒன்றில் தடை செய்யப்  பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.  இதையடுத்து அந்த கடையின் உரிமையாளர் மகா தேவனிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் உட னடியாக மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலரை வர வழைத்து அந்த கடைக்கு சீல் வைத்தனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள மளிகை கடைகளுக்கும் காவல்துறை யினர் நேரில் சென்று குட்கா புகையிலை பொருட்கள் விற்  பனை செய்வது தெரிய வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்தனர். கடை உரிமையாளர் மகதேவன் மீது மதிச்சியம் காவல் நிலையத்தில் இதுவரை 20 குட்கா வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கஞ்சா கடத்திய வாலிபர் கைது

கடமலைக்குண்டு, அக்.20- தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே வெள்ளை  கணவாய் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் கடமலைக்குண்டு போலீசார் புதன்கிழமை இரவு வெள்ளை கணவாய் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட னர். அப்போது கணவாய் வழியாக கையில் சாக்கு மூட்டை யுடன் நடந்து வந்து கொண்டிருந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  அப்போது அவர் சிங்கராஜபுரம் கிராமத்தை சேர்ந்த முத்துராமன் என்பவரின் மகன் அருண்குமார் (வயது 21)என தெரிய வந்தது. மேலும் அவர் தூக்கிவந்த சாக்கு  முட்டையை சோதனை செய்தபோது அதில் 10 கிலோ கஞ்சா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை யடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அருண்  குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசா ரணையில் கஞ்சா கடத்தலில் சிங்கராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த அழகுராஜா (25), சந்தோஷ் (24), விக்னேஸ்வரன் (22) அல்லாபாய் (26), பிரகாஷ் (29) ஆகிய 5 பேருக்கு தொடர்பு இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதைத்  தொடர்ந்து தலைமறைவாக உள்ள மற்ற 5 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விருதுநகர் அருகே மின்வேலியில் சிக்கி இருவர் பலி

விருதுநகர், அக்.20- விருதுநகர் அருகே முதலிபட்டியில் தோட்டத்திற்கு குளிக்கச் சென்ற இருவர் சட்டவிரோதமாக அமைக்கப் பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தனர். விருதுநகர் அருகே சதானந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள் தனியார் வேன் ஓட்டுநர் சீனிவாசன் (42), மற்றும் சுமைப்பணி தொழிலாளி முனியசாமி (48). இவர்கள் அருகில் உள்ள  முதலிபட்டியில் மோகன்ராஜ் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்திற்கு குளிக்கச் சென்றனர். அவரது தோட்டத்தில் வனவிலங்குகள் புகுந்து பயிர்  களை நாசம் செய்துவிடக் கூடாது என்பதற்காக, சட்ட விரோதமாக மின்வேலி அமைத்திருந்துள்ளார். இரவு நேரங்களில் மின்வேலியில் மின்சாரம் பாயும் வகையில் செய்து விட்டு, அதிகாலை அதை அணைத்து விடுவது வழக்கம் எனக் கூறப்படுகிறது.  இந்நிலையில், சீனிவாசன், முனியசாமி ஆகியோர் அங்கு சென்றுள்ளனர். இருவரும் மின்வேலியை தொட்டுள்ளனர். அப்போது இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து, தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இருவரது அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தி னர், இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து வச்சக்கா ரபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, சட்ட விரோதமாக மின்வேலி அமைத்த தோட்ட உரிமையாளர் மோகன்ராஜை தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் தொடர்மழை  நிரம்பி வழியும் அணைகள்

தேனி, அக்.20- தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அணை களும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.  வியாழக்கிழமை காலை நிலவரப்படி வைகை அணை யின் நீர்மட்டம் 70.47 அடியாக உள்ளது. நீர் வரத்து 1902  கனஅடி, திறப்பு 1319 கனஅடி, இருப்பு 5957 மி.கனஅடி. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.60 அடி,  நீர்வரத்து 1604 கனஅடி, திறப்பு 511 கனஅடி, இருப்பு 5536 மி.கனஅடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி,  நீர்வரத்து 405 கனஅடி, திறப்பு 40 கனஅடி. சோத்துப் பாறை அணையின் நீர்மட்டம் 126.20 அடி, வரத்து 201 கனஅடி, திறப்பு 30 கனஅடி.  மழையளவு  பெரியாறு- 2, தேக்கடி- 1.8, கூடலூர்- 1.2, உத்தமபாளை யம்- 2.6, வீரபாண்டி- 5.2, ஆண்டிபட்டி- 3.2, போடி- 4.2, சோத்துப்பாறை- 5, பெரியகுளம்- 2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

பழங்காநத்தம் ஆரம்ப சுகாதார மையத்தை  நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையமாக தரம் உயர்த்துக!

மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை மனு அளிப்பு

மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை மனு அளிப்பு மதுரை, அக்.20- மதுரை மாநகராட்சி 74 ஆவது வார்டு  பழங்காநத்தம் பகுதியில் இயங்கி வரும்  ஆரம்ப சுகாதார மையத்தினை நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையமாக தரம் உயர்த்த  வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு-1 பகுதிக்குழு சார்பில் வியாழனன்று மாநகராட்சி முதன்மை சுகாதார அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. வார்டு 68 பொன்மேனி பகுதியில் செயல்  பட்டு வந்த ஆரம்ப சுகாதார மகப்பேறு மருத்துவமனையை மீண்டும் செயல் படுத்த வேண்டும். மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள், செவிலி யர்கள், தொழில்நுட்ப பிரிவினர் ஊழி யர்கள் நியமிக்கவும் தேவையான மருந்து கள் அடிப்படை வசதிகள் செய்திட வேண்  டும் என்று வலியுறுத்தப்பட்டது. சுகாதா ரத்துறை அதிகாரி உரிய பரிசீலனை செய்து  நடவடிக்கை எடுக்கப்படும் என தெரி வித்தார்.கோச்சடை கண்மாயில் உள்ள குப்பைகளை அகற்றி நிலத்தடி நீரை பாது காத்திடவும் மதுரை கோச்சடை பகுதியில்  உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கோச் சடை கண்மாயில் உள்ள குப்பைகளை அகற்றி நிலத்தடி நீரை பாதுகாக்க வேண் டும் என்றும் மாநகராட்சி சொந்தமான இடங்களை அடையாளம் கண்டு நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கீடு செய்துள்ள நிதியின் மூலம் பணிகள் நடை பெற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாநகராட்சி நகர் பொறியாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மா.கணேசன், மாவட்ட செயற்  குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன், மேற்கு-1 பகுதிக்குழு செயலாளர் கு.கணேசன், பகுதிக்குழு உறுப்பினர் கருத்தக்கண்ணன் ஆகியோர் மனு அளித்தனர்.

தட்டச்சு தேர்வை புதிய முறைப்படி  நடத்தி முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, அக்.20-  தமிழகத்தில் தட்டச்சு தேர்வை புதிய முறைப்படி நவம்பர் 13 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க தொழில் நுட்ப கல்வி இயக்கத்திற்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடந்த 75 ஆண்டுகளாக தட்டச்சு  தேர்வில் தாள்-1 ஸ்பீடு தேர்வும், தாள் - 2  ஸ்டேட்மெண்ட் -லெட்டர் தேர்வும் நடை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்ட தேர்வு அறிவிப்பானது இளநிலை மற்றும் முதுநிலை தேர்வில் தாள்-1ல் லெட்டர்- ஸ்டேட்மெண்ட், தாள்-2ல் ஸ்பீடும் இருக்கும் என்பது போன்று நிலையில் உள்ளது. எனவே, 75 ஆண்டுகளாக நடைபெறும் முறையில் தாள்-1ல் ஸ்பீட் தேர்வும், தாள் -  2ல் ஸ்டேட்மெண்ட்- லெட்டர் தேர்வும் நடை பெற உத்தரவிட வேண்டும் என்று தெரி விக்கப்பட்டது.  இதன் மிது விசாரணை நடத்திய தனி நீதிபதி தமிழகத்தில் பழைய முறைப்படி தாள்-1 இல் ஸ்பீடு தேர்வும், தாள்-2ல்  லெட்டர்- ஸ்டேட்மென்ட் தேர்வும் நடை பெறும் என உத்தரவிட்டார். இந்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து திருச்சி, தட்டச்சு பயிற்சி நிலைய உரிமை யாளர் பிரவீன் குமார் மேல் முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு வியாழனன்று நடைபெற் றது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் தட்டச்சு தேர்வு வழக்கம் போல் நடைபெறும் என தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை தமி ழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்தக்கூடாது எனக் கூறி வழக்கை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்திருந்தனர்.  இந்த நிலையில் அக்டோபர் 20 அன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவர்களின் நலன்  கருதி, தமிழகத்தில் தட்டச்சு தேர்வை புதிய  முறைபடி தாள்-1ல் லெட்டர்- ஸ்டேட்மெண்ட் தேர்வும், தாள்-2ல் ஸ்பீடு தேர்வும் இருக்கும் வகையில் நவம்பர் 13 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தொழில் நுட்ப கல்வி இயக்கத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மலைவேடன் பழங்குடியினருக்கு இனச்சான்றிதழ் வழங்க மாநில மனித உரிமை ஆணையம் இரண்டாவது உத்தரவு

திண்டுக்கல், அக்.20- திண்டுக்கல் மாவட்ட மலை வேடன் பழங்குடி இன மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்க தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் இரண்டாவதாக உத்தரவிட்டுள்ளது. 2000-ஆம் ஆண்டு வழங்கிய உத்தரவை இன்று வரை அமல் படுத்தாமல் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் வஞ்சித்த நிலையில் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பு நம் நெஞ்சில் பால் வார்த்தது போல் உள்ளது என்று  இதற்காக அரும்பாடுபட்ட தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர்டில்லி பாபு அவர்களுக்கு தமிழ் நாடு மலைவேடன் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.  தமிழ்நாடு முழுவதும் உள்ள வருவாய் கோட்டாட்சியர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், எந்த வருவாய் கோட்டாட்சியர் மீது குறிப்பாக வழக்கு தொடுக்க விரும்புகிறீர்கள் என்று நீதிபதி கேட்டபோது, திண்டுக்கல் மற்றும் பழனி வருவாய் கோட்டாட்சியர் மீது வழக்கு பதிய விரும்புகிறேன் என்று சொல்லி, வழக்கில் வாதாட வழக்கறிஞர் வைத்துக்கொள்ளுங்கள் என்று நீதிபதி அவர்கள் கேட்டபோது, தானே இந்த வழக்கில் வாதாட விரும்புகிறேன் என்று டில்லிபாபு ஆணையத்தில் தெரிவித்தார் அதை ஏற்றுக்கொண்டு ஆணையம் வாதிட அனுமதி அளித்தது. ஆணையத்தில் மிகச் சிறப்பான வாதத்தை வைத்து இந்த வழக்கில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.  ஆணையத்தில் சமர்ப்பிப்பதற்காக சுமார் 60 பக்கங்கள் கொண்ட ஆவண ஆதாரங்களை டில்லிபாபு அளித்தார். ஆணையத்தின் தற்போதைய உத்தரவை அமல்படுத்த தமிழக அரசை வலியுறுத்துவதாக மலைவாழ் மக்கள் சங்கம் உறுதி அளித்துள்ளது. இந்த வழக்குக்கு உதவிய ராமமூர்த்திக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.டில்லிபாபு அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றியினை தெரிவித்து கொள்கிறோம் என்று தமிழ்நாடு மலைவேடன் முன்னேற்ற சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

இ-சேவை மையங்களில் கூடுதல்  கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை மதுரை ஆட்சியர் எச்சரிக்கை

மதுரை, அக்.20- இ-சேவை மையங்களில் அரசு நிர்ண யித்த தொகையைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் பணியாளர்கள் மீது உரிய நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ். அனீஷ் சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  மதுரை கிழக்கு வட்டாட்சியர் அலுவ லகத்தில் புதனன்று மாவட்ட ஆட்சித் தலை வர் மரு.எஸ்.அனீஷ் சேகர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  மதுரை கிழக்கு வட்டாட்சியர் அலுவல கத்தில் உள்ள இ-சேவை மையத்தில் பொது மக்களுக்கு வருவாய்த்துறை சார்ந்த சான்றி தழ்கள், முதியோர் ஓய்வூதிய திட்டங்கள் சார்ந்த விண்ணப்பங்கள் மற்றும் பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு கூடுதல் கட்ட ணம் ஏதும் வசூலிக்கப்படுகிறதா என்பன குறித்து ஆய்வு மேற்கொண்டார்.   ஆட்சியர் நடத்திய ஆய்வில் இ-சேவை  மையங்களில் பணிபுரியும் இரண்டு பணி யாளர்கள் எதிரே உள்ள ஜெராக்ஸ் கடைக்  காரருடன் இணைந்து முறைகேடாக செயல்பட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட னர். மேலும் ஜெராக்ஸ் கடைக்காரர் முறை கேடாக கட்டணம் வசூல் செய்ததால் மேற்  படி நபர்கள் மீது காவல்துறையில் புகார்  செய்யப்பட்டு தக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மதுரை மாவட்டத்தில் தனியார் கணினி மையங்களில் (ஜெராக்ஸ் கடை)  பொது இ-சேவை மையம் செயல்படுத்து வதற்கு முறையாக அரசு அனுமதி பெறா மல் முற்றிலும் பொதுமக்களின் பயன் பாட்டிற்கு வழங்கப்பட்ட (Citizen Portal) முறையினை தவறுதலாக பயன்படுத்தி வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதிய திட்டங்கள் சார்ந்த விண்ணப்பங்கள் மற்றும் பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்பங்களை பதி வேற்றம் செய்வதற்கு கூடுதல் கட்டணம் பெற்றுக் கொண்டு பதிவேற்றம் செய் தாலோ, அல்லது இது தொடர்பாக விளம்பர பலகைகள் வைத்தாலோ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  

அரசு இ-சேவை மையங்களில் வரு வாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் சான்றுகள் தொடர்பான விண்ணப்பங் களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்று ரூ.60-ம், ஓய்வூதிய திட்டங்கள் தொடர் பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வ தற்கு மனு ஒன்றுக்கு ரூ.10-ம், இணைய வழி பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்  பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு  ஒன்று ரூ.60-ம் அரசினால் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இடைத்தர கர்களை தவிர்த்து அருகிலுள்ள வட்டாட்சி யர் அலுவலகம், மாநகராட்சி மண்டல  அலுவலகங்கள், நகராட்சி அலுவல கங்கள், கூட்டுறவு சங்க இ-சேவை மையங்  கள், மகளிர் திட்டங்கள் மூலம் கிராம ஊராட்சிகளில் செயல்படும் இ-சேவை மையங்கள், அரசு அங்கீகாரம் பெற்ற அரசு இ-சேவை மையங்களை மட்டுமே அணுக வேண்டும். அரசு நிர்ணயித்த கட்ட ணத்தைத் தவிர அதிக கட்டணம் பெறும்  இ-சேவை மையங்கள் பற்றிய புகார் களுக்கு tnesevaihelpdesk.tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கட்டணமில்லாத தொலைபேசி எண் 1100 மற்றும் 18004251333 மூலமாகவோ புகார்களை தெரிவிக்கலாம். மதுரை மாவட்டத்தில் இ-சேவை மையத்திற்கான அரசு அங்கீகாரம் இல்லாத கணினி / ஜெராக்ஸ் மையங்களில் (Computer Centres / Xerox Shops) பொது  மக்களுக்குரிய Citizen Portal முறை யினை தவறாக பயன்படுத்தி கூடுதல் கட்ட ணங்கள் வசூலிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. புகார்  கள் வரும் பட்சத்தில் அவர்கள் மீது காவல்  துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப் படும் என இதன் மூலம் கடுமையாக எச்ச ரிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்  துள்ளார்.

இராஜபாளையம் நகராட்சியில் வராத  தாமிரபரணி தண்ணீருக்கு வரி விதிப்பு முழுமையாக ரத்து செய்யக்கோரி முதல்வருக்கு சிபிஎம் மனு

இராஜபாளையம், அக்.20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராஜபாளையம் நகரச்செயலாளர் மாரி யப்பன் முதல்வருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டம், இராஜபாளை யம் நகராட்சி தாமிரபரணி கூட்டு குடிநீர்  திட்டப்பணிகள் ரூ.180 கோடி மதிப்பீட்டில்  கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் நடை பெற்று வருகிறது. நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் பணி இன்னும் நிறை வடையவில்லை.  தாமிரபரணி கூட்டு குடிநீர்த்திட்டப் பணிக்காக நகராட்சியின் பங்குத் தொகை யாக ரூ.53 கோடியை நகராட்சியில் இருந்து ஈடு செய்வதற்க்கு போதுமான நிதி இல்லாத காரணத்தால், மொத்த மதிப்பீட்டில் 20 சத வீதத்தை தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடனாக பெறு வதற்கு 11.07.2016 ஆம் தேதியன்று அதி முக தலைமையிலான நகர்மன்றம் தீர்மா னம் நிறைவேற்றியது. அத்தீர்மானத்தில், குடிநீர் கட்டணம் மற்றும் வைப்புத் தொகைக்கான கட்ட ணத்தை மாற்றியமைத்தும் தீர்மானம் நிறை வேற்றினார். அதன்படி குடியிருப்புகளுக்கு 500 ச.அடி வரை மாதம் ரூ.50 என்பதை ரூ.150- ஆகவும், அதற்கு மேல் சதுர அடிக்கு தகுந்தவாறு கட்டணத்தை நிர்ண யம் செய்யவும், வணிகம் மற்றும்  தொழிற்  சாலைகளுக்கு தனியாகவும் கட்டணம்  நிர்ணயம் செய்து தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.  மேலும் அத்தீர்மானத்தின் நிறைவாக திருத்தியமைக்கப்பட்ட கட்டண உயர்வு  மற்றும் வைப்புத்தொகை திட்டம் பயனுக்கு வரும் நாள் முதல் நடைமுறைப்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

ஆனால் தாமிரபரணி குடிநீர் திட்டப் பணிகள் இராஜபாளையம் நகராட்சியில் இன்னும் நிறைவடையவில்லை. பணி கள் நிறைவடையாமல் ஆங்காங்கே தெருக்  கள் மற்றும் சாலைகள் சேதமடைந்தி ருப்பதையொட்டி மக்கள் சொல் லொண்ணா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் 2016 ம்  ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி திருத்தியமைக்கப்பட்ட குடிநீர் கட்ட ணத்தை 01.04.2022 முதல் நகராட்சி நிர்வாகம் வசூலிக்க ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து பொதுமக்களும், அரசி யல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலை யில் தி.மு.க தலைமையிலான நகர்மன்றம் 21.07.2022 ம் தேதியன்று நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில், 500 சதுர அடிக்கு  கீழ் உள்ள குடியிருப்புகளுக்கு மாதம்  ரூ.100- எனவும், அதற்குமேல் உள்ள குடி யிருப்புகளுக்கு மாதம் ரூ.150- எனவும், வணிகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தனியாகவும் கட்டணம் நிர்ணயம் செய்து தீர்மானம் நிறைவேற்றியது. திமுக தலைமையிலான நகர்மன்றம் குடிநீர் கட்டணத்தை மாற்றியமைத்து தீர்மா னம் நிறைவேற்றியிருக்கும் நிலையில், இதற்கு  முன் பொறுப்பில் இருந்த அதிமுக  நகர்மன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தின் படி குடிநீர் கட்டணம் ஆண்டுக்கு ரூ.1800 (இதுவரை ஆண்டுக்கு ரூ.600) வழங்க வேண்டுமென  குறிப்பாணை வீடுதோறும் வழங்கி உள்ளனர். இது பொதுமக்கள் மத்தி யில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள் ளது. எனவே தாங்கள் தலையீடு செய்து தாமிரபரணி குடிநீர் திட்டப்பணிகள் முடிந்து, பயன்பாட்டுக்கு வரும் வரை உயர்த்தப் பட்ட குடிநீர் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென பொதுமக்கள் சார்பிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பிலும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.