தூத்துக்குடி, டிச.7 தூத்துக்குடி விகாசா பள்ளியின் வெள்ளி விழாவை முன்னிட்டு நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் சாயர்புரம் விகாசா பன்னாட்டு பள்ளியில் நடை பெற்றது. முகாமினை சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையேற்று துவக்கி வைத்தார். பள்ளின் தாளாளர் வேல்சங்கர், பள்ளி முதல்வர் சார்லஸ் ஆகி யோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். முகாமில் 320 நோயாளிகள் சிகிச்சைக் காக பங்கேற்றனர். 190 நபர்களுக்கு இல வசமாக கண் கண்ணாடிகள் வழங்கப் பட்டது. 16 நபர்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள தங்கும் இட வசதி, உணவு, போக்குவரத்து இலவசமாக செய்து தரப்பட்டன. 400க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.