மதுரை, ஏப்.7- மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 10 லட்சத்தில் மதுரை மாநகராட்சி 63 ஆவது வார்டு பாத்திமாநகர் ஆரம்ப சுகாதார மையம் மகப்பேறு மருத்துவ மனையில் கூடுதல் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி ஏப்ரல் 7 வெள்ளியன்று நடைபெற்றது. இதில் மதுரை வடக்கு மண்டல தலைவர் சரவண புவனேஸ்வரி, மாமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன், மேற்கு - 1 ஆம் பகுதிக்குழு செயலாளர் கு. கணேசன், திமுக 63 ஆவது வார்டு பகுதி செயலாளர் சின்ஸ் சிவா, 64 ஆவது வார்டு பகுதி செயலாளர் நாகஜோதி சிவா மற்றும் நிர்வாகிகள் நாகராஜ், ஏட்டு ராஜா, ஆரம்ப சுகாதார தலைமை மருத்துவர் சோபனா, மாநகராட்சி உதவி செயற் பொறி யாளர் மல்லிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.