நாகர்கோவில், மே 16- கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணாக்கர்களுக்கான என் “கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழி காட்டுதல் நிகழ்ச்சியானது தன்னார்வ இயக்கத்தின் துணையுடன் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணாக் கர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி, பத்மனாப புரம் வருவாய் கோட்டாட்சியர் செ.தமிழ ரசி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் எஸ்.கே.கனகராஜ், தாட்கோ மாவட்ட மேலாளர் எம்,தெய்வகுருவம்மாள். முன்னோடி வங்கி மேலாளர் கே.எல்.பிரவீன்குமார், பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்கள் கலந்து கொண்டனர்.