districts

img

விவசாய விரோத வேளாண் சட்டங்களை ரத்து செய்ய  வலியுறுத்தி தில்லியில் போராடிய விவசாயிகள்

விவசாய விரோத வேளாண் சட்டங்களை ரத்து செய்ய  வலியுறுத்தி தில்லியில் போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவேண்டும்.  போராட்டத்தில் உயிரிழந்த 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை திருமங்கலத்தில்  ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கன்வீனர் ஜி.சந்தானம், தமிழ்நாடு விவசாயிகள்  சங்க  மாவட்டத் தலைவர் எஸ்.பி.இளங்கோவன்,  மக்கள் அதிகாரம் குருசாமி, மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆர்.சி.சுப்பிரமணி, மாரியப்பன், ராசுஅய்யர், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.