districts

img

இராமநாதபுரம் ஆட்சியரகத்தை விவசாயிகள் முற்றுகை

இராமநாதபுரம்,அக்.21-  இராமநாதபுரம்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று நடை பெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கடன் தள்ளுபடி திட்டத்தில் விவசாயி களுக்கு கடன் தள்ளுபடி சான்று வழங்கா மல் இரண்டு ஆண்டுகளாக அலைக்கழிக் கப்படுகிறார்கள் .எனவே கடன் வழங்கவும் உரம் வழங்கவும் வலியுறுத்தி  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.முத்துராமு,  மாவட்ட செய லாளர் மயில்வாகனன், சகாதேவன், தங்கச் சாமி மற்றும் கவாஸ்கர் இராஜா,   மரிய அருள் உட்பட திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர்.. கூட்டுறவு அதிகாரிகள் உரங்களை உடன் வழங்குவதாக உறுதியளித்தனர். சம்மந்தப்பட்ட கூட்டுறவு கடன் சங்கங்க ளில் தணிக்கை முடித்து நவம்பர் இறுதிக் குள் கடன் வழங்கப்படும் என்று உறுதிய ளித்த நிலையில் போராட்டம் முடிவுற்றது.