districts

img

புத்தன்தருவை குளத்தில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

தூத்துக்குடி, டிச.19 புத்தன்தருவை குளத்தில் தண்ணீர் அதிகரித்துள்ளதை யொட்டி தட்டார்மடத்தில் இருந்து புத்தன்தருவை செல்லும்  சாலை துண்டிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஒன்றியம் தட்டார்மடம் பகுதியில் பெரிய குளங்களாக புத்தன்தருவை, வைரவம்தருவை உள்ளிட்ட குளங்கள் உள்ளன. நடப்பு ஆண்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதும் தென்  பகுதியில் அதிகமழை பெய்ததால்  நெல்லை மாவட்டத்தில் அனைத்து குளங்களும் நிரம்பி கருமேனி ஆற்று மூலம் வந்த  தண்ணீராலும், சடையனேரி கால்வாய் மூலம் வந்த தண்ணீரா லும் வைரவம் தருவை நிரம்பி, புத்தன்தருவை குளத்துக்கு  நீர் வரத்து அதிகரித்து வருகிறது.  இதனால்  தட்டார்மடத்தில் இருந்து புத்தன்தருவை செல்லும் இணைப்பு சாலை தண்ணீ ரில் மூழ்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் இருந்து புத்தன்தருவை, குட்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் பெரியதாழை, திசை யன்விளை வழியாக செல்கின்றனர். . ஆண்டுதோறும் புத்தன் தருவை குளம் நிரம்பினால் இப்பகுதியில் தொடர்ந்து போக்கு வரத்து துண்டிக்கப்படும்நிலை ஏற்படுகிறது. ஆதலால் அதி காரிகள் ஆய்வு நடத்தி தட்டார்மடம் - புத்தன்தருவை சாலை யிடையே உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். புத்தன் தருவை குளத்தில் நடப்பு ஆண்டு தண்ணீர் அதிகரித்து குளம் நிரம்பும் நிலையை எட்டியுள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

;