சிவகங்கை,டிச.22- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா பிராமணப்பட்டிகுரு மேலை யான்பட்டி கிராமத்தில் கிராம மக்களுக்கு பயன்பாட்டில் இருந்து வருகிற மேய்ச் சல் நிலங்கள், இரண்டு ஊரணிகள், கழுங்கு தண்ணீர் செல்கிற பாதை, மயான நடைபாதை ஆகியவற்றுக்கு தனி நபருக்கு பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலா ளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜெயராமன் , மாவட்ட துணைச்செயலாளர் மோகன், மேலையான்பட்டிகிராம தலைவர் கருப்பையா, மேலையான்பட்டி விவசாயி கள் சங்க நிர்வாகிகள் சந்திரசேகர், மதுரை வீரன், துரைசாமி , வெற்றிவேல், கருப்பையா ஆகியோர் பேசினர். மதுரைவீரன் பேசுகையில், மேலை யான்பட்டி கிராமத்தில் கீழையான் கண்மாயும் அதன் உபரி நீர் வெளியேறும் பகுதி சுமார் 12 ஏக்கர் நிலங்களுக்கு தனி நபருக்கு பட்டா கொடுக்கப்பட்டிருக்கிறது. குடிநீர் ஊரணி, மேய்ச்சல் நிலங்கள், தண்ணீர் செல்கிற கால்வாயும் தனி நபருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கொடுத்திருக்கிறார்கள். இந்த உறுதிப் படி செயல்படாவிட்டால் அடுத்த கட்ட மாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சித் தலை வர் வளாகத்தில் பிரச்சனை தீரும் வரை காத்திருக்கும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.