சிவகங்கை, டிச.17- சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியம் தர்ம பட்டி தொடக்க கூட்டுறவு சங்கத்தில் முறைகேடுகளும் ஊழலும் தொடர்ந்து நடைபெற்று வருவது தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் கூட்டுறவு இணைப்பதிவாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், தர்மபட்டி தொடக்கக் கூட்டுறவு சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் தொ டர்ந்து நடைபெற்று வருகின்றன. சங்கத்தின் தலைவரும், வங்கி யின் மேற்பார்வை அதிகாரிகளும் கூட்டணியாக சேர்ந்து இந்த முறை கேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக இப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்துள் ளனர். எனவே, முறையான விசா ரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு சங்கத்தை பாது காத்திட வேண்டும் என்று வலி யுறுத்தியுள்ளனர். அதிகாரிகள் கொண்ட குழு விரைவில் விசாரணை செய்வார் கள். உரிய நடவடிக்கை மேற்கொள் வார்கள் என்று இணைப்பதிவாளர் உறுதி அளித்துள்ளார்.