சிவகங்கை, செப்.7- சிவகங்கை மாவட்டம் வெளியாத்தூர் கண்மாய் நிரம்பி வீட்டுக்குள்ளும், வய லுக்குள்ளும் தண்ணீர் சென்றதால் விவசாயிகளும் மக்களும் பாதிப்படைந்துள ளனர். இதனை சரிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம் ஆகி யோர் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில், சிவ கங்கை மாவட்டம் திருப்பத் தூர் வட்டம் நாச்சியாபுரம் பிர்க்கா வெளியாத்தூர் குரூப் வெளியாத்தூர் மற்றும் சாத் தனூர் கிராமங்களில் உள்ள கண்மாயில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்த கண்மாயில் தண்ணீர் நிரம்பி கலுங்கில் தண்ணீர் போகாமல் உள் ளது. அதனால் குடியிருப்பு பகுதிகளிலும் விவசாய வயல்களிலும் தண்ணீர் புகுந்தது. இதன் அருகே உள்ள வெளியாத்தூர் பொதுப் பணித்துறை கண்மாய் மடை யை அடைத்தாலும் தண்ணீர் வெளியேறுகிறது.இந்த தண்ணீர் உடலைமுத்து கண்மாய்க்கு வருகிறது. இந்த தண்ணீர் குடியிருப்பு பகுதிகளிலும் வயல்களிலும் தேங்கியிருக்கிறது. குடியி ருப்பு பகுதிகளில் மக்கள் வாழ அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் விதைப் புப் பணி துவங்காமல் தாம தம் ஏற்படுகிறது.உடனடி யாக உடலைமுத்து கண்மா யின் தண்ணீரை கழுங்கு வழியாக வெளியேற்றுவதற்கு தாலுகா நிர்வாகமும் கல் லல் ஒன்றிய நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், வெளியாத்தூர் சாத் தனூர் கிராம விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.